அரசியல் ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டும்….காங்கிரஸ்

பெங்களூரு:

அரசியலமைப்பு ஜனநாயகத்தை மத்திய அரசிடம் இருந்து காப்பாற்ற வேண்டிய சூழல் நிலவுகிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆசாத் நிருபர்களிடம் கூறுகையில், ‘‘ஒரு விளையாட்டுக்கு 2 விதிகள் இருக்க முடியாது. அரசியலமைப்பு, ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டியது மத்திய அரசின் கடமை.

ஆனால் இவற்றை மத்திய அரசிடம் இருந்து காப்பற்ற வேண்டிய துரதிருஷ்டவசமான சூழ்நிலை நிலவுகிறது. உச்சநீதிமன்றத்தின் மீது நம்பிக்கை உள்ளது. கவர்னர் மீண்டும் ஒரு தவறை செய்ய மாட்டார்’’ என்றார்.