ஸ்ரீநகர்: அரசியல் தடுப்பு காவலில் உள்ளவர்களை தனியார் ஓட்டல் ஒன்றுக்கு மாற்ற அரசு நிர்வாகம் முடிவெடுத்திருக்கிறது.

ஜம்மு காஷ்மீரை 3 யூனியன் பிரதேசங்களாக மத்திய அரசு பிரித்தது. மத்திய அரசின் இந்த நடைமுறை வரும் 31ம் தேதியிலிருந்து அமலுக்கு வருகிறது. மத்திய அரசின் அறிவிப்பால், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு இடங்களில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

தொலைத்தொடர்பு, இணைய வசதிகள் ஆகியவை முடக்கப்பட்டன. பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வீட்டுக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர். ஏராளமானோர் தொடர்ந்து தடுப்புக்காவலில் இருக்கின்றனர்.

இந் நிலையில், தால் ஏரி அருகில் உள்ள சென்டார் ஓட்டலில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டவர்களை மாற்ற அரசு நிர்வாகம் முடிவு செய்திருக்கிறது. அதாவது, ஆகஸ்ட் 5 முதல் கைது செய்யப்பட்ட அவர்கள் தொடர்ந்து காவலில் இருக்கின்றனர்.

அவர்கள் தற்போது வைக்கப்பட்டுள்ள ஓட்டல்களில் போதிய வசதிகளை செய்து கொடுக்க முடியாததால், கண்டோன்மன்ட் பகுதியில் தனியார் ஓட்டலுக்கு மாற்றப்பட உள்ளனர். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட ஓட்டல் நிர்வாகத்திடம் பேசி விட்டதாக அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.