சென்னை: தமிழகத்தில் அமித்ஷா வருகைக்கு பிறகு வாரிசு அரசியல் தொடர்பான கருத்துக்களும், விமர்சனக்ளும் அதிகரித்துள்ள நிலையில், திமுக பொதுச்செயலாளர் துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க முடியுமா என்று மு.க.ஸ்டாலினுக்கு  அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த நிலையில், இன்று செய்தியாளார்கள் சந்திப்பில் பேசிய அமைச்சர் ஜெயக்குமார்,  “அரசியல் இல்லாமல் உலகம், நாடு, மாநிலம், ஏன் யாரும் இல்லை. எனவே அரசு நிகழ்ச்சியில் அரசியல் பேசுவது தவறில்லை. என் மகனை நான் அரசியலுக்கு கொண்டு வரவில்லை. ஜெயலலிதாதான் கொண்டு வந்தார். திமுக வழிவழியாக வாரிசு அரசியல் செய்து வருகின்றனர். அதிமுகவில் அதுபோன்று இல்லை. அதிமுகவில் கொடி பிடித்தவர் கூட முதல்வராக முடியும், திமுகவில் முடியுமா?‘ துரைமுருகனை முதல்வர் வேட்பாளராக அறிவிக்க மு.க.ஸ்டாலின் தயாரா? உதயநிதியை அறிப்பாரே தவிர துரைமுருகனை அறிவிக்கமாட்டார்” என்று  கூறினார்.