கருணாஸ் கைது : அரசியல் தலைவர்கள் கண்டனம்

சென்னை

டிகரும் சட்டப்பேரவை உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டதற்கு பல அரசியல் தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

சென்னையில் ஒரு பொதுக்கூட்டத்தில் வன்முறையை  தூண்டும் படி பேசியதாக நடிகரும் சட்டபேரவை உறுப்பினருமான கருணாஸ் கைது செய்யப்பட்டு நீதிமன்றக்காவலில் வைக்கப் பட்டுள்ளார்.  அத்துடன் அவரது ஆதரவாளரும் முக்குலத்தோர் புலிப்படை கட்சி பொதுச் செயலாளருமான தாமோதர கிருஷ்ணன் மீது 7 பிரிவுகளில் வழக்கு பதியப்பட்டுள்ள்து.

 

கருணாஸ் கைது குறித்து அமமுக தலைவர் டிடிவி தினகரன், ”உடனடியாக கருணாஸை கைது செய்த தமிழக காவல்துறை எச் ராஜாவை இதுவரை ஏன் கைது செய்யவில்லை?  தமிழக அரசு கைது செய்வதில் பாரபட்சம் காட்டி நடந்துக் கொள்கிறது “ எனக் கூறி உள்ளார்.

.

மதிமுக கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ,”கருணாஸ் மட்டும் அல்ல, எச் ராஜாவும் கைது செய்யப்பட வேண்டியவரே என்பதில் ஐயமில்லை.  ஆனால் தமிழக அரசானது மத்திய அரசுக்கு பயந்து எச் ராஜாவை இன்னும் கைது செய்யாமல் இருக்கிறது” என தெரிவித்துள்ளார்.

 

தேமுதிக தலைவர் விஜயகாந்த், “எத்தனையோ பேர் சமீப காலமாக அவரவர் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.  இந்நிலையில் கருணாசை மட்டும் கைது செய்தது ஏன்? தமிழக அரசு ஒரு சிலரை மட்டும் பழி வாங்கும் நடவடிக்கையில் கைது செய்வதும்,  வேறு சிலரை கண்டுகொள்ளாமல் இருப்படை ஏற்க முடியாது.   தண்டனை என்பது தவறு செய்வோர் அனைவருக்கும் சமமாக இருக்க வேண்டும்” என கூறி உள்ளார்

இதே போல் கம்யூனிஸ்ட் தலைவர் முத்தரசன் உள்ளிட்ட பலரும் கண்டன அறிக்கை வெளியிட்டுள்ளனர்