Random image

அரசியல் கட்சிகள் புறக்கணிப்பு: காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைப்பு?

ஸ்ரீநகர்:

ம்மு காஷ்மீரில் உள்ளாட்சி தேர்தல் ஒத்திவைக்கப்படும் சூழல் உருவாகி உள்ளதாக கூறப்படுகிறது. அங்கு பெரும்பாலான அரசியல் கட்சிகள் உள்ளாட்சி தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் தள்ளி வைக்கப்படும் என தகவல் வெளியாகி உள்ளது.

காஷ்மீர் மாநிலத்தில் கடந்த  2011-ம் ஆண்டு ஏப்ரல்-மே மாதத்தில் உள்ளாட்சி தேர்தல்கள் நடைபெற்ற நிலையில் 7 ஆணடுகள் கழித்து தற்போது உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.  அக்டோபர் 1ந்தேதி முதல் 5ந்தேதி தேதி வரை நகராட்சி தேர்தல்களும், நவம்பர் 8 ந்தேதி முதல் பஞ்சாயத்து தேர்தல்களும் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உளளது.

இதற்கிடையில்,  காஷ்மீர் மாநிலத்தை இந்தியாவில் இருந்து பிரித்து தனிநாடாக அறிவிக்க வேண்டும் என அங்கு போராட்டத்தில் ஈடுபட்டுள்ள  பிரிவினைவாதிகள்  உள்ளாட்சி தேர்தல்களை புறக்கணிக்குமாறு வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில், காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கும் சட்டப்பிரிவு தொடர்பான வழக்கு உச்சநீதி மன்றத்தில் நிலுவையில் உள்ளது. இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கடந்த 1954-ம் ஆண்டு 35-ஏ பிரிவு சேர்க்கப்பட்டது. இது காஷ்மீர் மக்களுக்கு சிறப்பு உரிமை வழங்குவதுடன் பிற மாநில மக்கள் காஷ்மீரில் அசையா சொத்துகளை வாங்க தடை விதிக்கிறது.

இந்தப் பிரிவை ரத்து செய்யக் கோரி உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு நிலுவையில் உள்ள நிலையில்,  சிறப்பு அந்தஸ்து சட்டத்தை ரத்து செய்யக்கூடாது என மாநில கட்சிகள் போர்க்கொடி தூக்கி உள்ளன.
உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தேசிய மாநாட்டு கட்சி ஏற்கெனவே அறிவித்திருந்தது. அதையடுத்து, முன்னாள் முதல்வர்  மெஹபூபா முப்தி தலைமையிலான தேசிய மாநாட்டுக்கட்சியும் காஷ்மீர் உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.

காஷ்மீரின் முக்கிய இருகட்சிகளும் உள்ளாட்சித் தேர்தலை புறகணிக்கப் போவதாக அறிவித்துள்ளதால், தேர்தல் ஒத்திவைக்கப்படலாம் என்றும், இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாக வாய்ப்பிருப்பதாகவும் கூறப்படுகிறது.