மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல மீண்டும் மக்களை குழப்பிய ரஜினியின் விளக்கம்…

சென்னை:  கொரோனா காரணமாக ரஜினி அரசியல் கட்சியை தொடங்குவதில் சிக்கல் எழுந்துள்ளதாக ஒரு அறிக்கை  வைரலான நிலையில், தற்போது, ரஜினி அதற்கு விளக்கம் அளித்துள்ளார். தகுந்த நேரத்தில் தனது அரசியல் நிலப்பாட்டை தெரிவிப்பேன் என்று கூறி மக்களை மீண்டும் குழப்பி உள்ளார்.

ரஜினியின் படையப்பா படத்தில் வரும் காமெடி காட்சிபோல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது என்று கூறுவதுபோல அவருடைய இன்றைய அறிக்கையும் உள்ளது.

நடிகர் ரஜினிகாந்த் அரசியல் கட்சிஅறிவிப்பதாக கூறி பல ஆண்டுகள் உருண்டோடிவிட்ட நிலையில், அதுகுறித்து தெளிவான முடிவு எடுக்க முடியாமல், அவரும் குழம்பி, அவரது ரசிகர்களையும் குழப்பி வருகிறார்.

இந்த நிலையில், ரஜினி வெளியிட இருந்ததாக ஒரு அறிக்கை கடந்த இரு நாட்களாக  சமூகவலைதளங்களில் வைரலானது. அதில், கொரோனா நோய் தொற்று காரணமாக தன்னுடைய அரசியல் திட்டங்களை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியவில்லை என்பதையும் மருத்துவர்கள் மற்றும் நண்பர்கள் ஆலோசனைப்படி இப்போதைக்கு அரசியல் கட்சி தொடங்குவது இயலாத செயல் என்பதையும் ரஜினி விளக்கி இருந்தார்.

இதுகுறித்து சமூகவலைதளங்களில் கடுமையாக விமர்சிக்கப்பட்டு வந்த நிலையில்,  ரஜினி தரப்பில் இருந்து இதை உறுதிபடுத்தாமல் இருந்து வந்தது.  இந்த அறிக்கை விஷயத்தில் ரஜினி மவுனமாக இருப்பது குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.  மேலும், இந்த அறிக்கை பெங்களூருவில் இருந்து வெளியாகி இருப்பதாகவும்,  ரஜினியின் கர்நாடக நண்பரின் வாட்ஸ்அப் குரூப்பில் இருந்து வந்தாகவும் உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் பரவின.

அதுக்கு அவர் சரிபட மாட்டார்: ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து மக்களின் மனநிலை….

இந்த ரஜினி, அந்த அறிக்கை குறித்து விளக்கம் அளித்து டிவிட் பதிவிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது,

என் அறிக்கை போல ஒரு கடிதம் சமூக வலைதளங்களிலும், ஊடகங்களிலும் தீவிரமாகப் பரவிக்கொண்டு வருகிறது. அது என்னுடைய அறிக்கை அல்ல என்பது அனைவருக்கும் தெரியும். இருப்பினும் அதில் வந்திருக்கும் என் உடல்நிலை மற்றும் எனக்கு மருத்துவர்கள் அளித்த அறிவுரைகள் குறித்த தகவல்கள் அனைத்தும் உண்மை.

இதைப்பற்றி தகுந்த நேரத்தில் ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகளோடு கலந்தாலோசித்து, எனது அரசியல் நிலைப்பாட்டை பற்றி மக்களுக்கு தெரிவிப்பேன் என ரஜினிகாந்த கூறியுள்ளார்.

ஆக… ரஜினி எப்போதும்போல குழப்பியது மட்டுமல்லாமல்,   அவரது படத்தின் காமெடிபோல, மாப்பிள்ளை அவர்தான், ஆனால் அவர் போட்டிருக்கிற டிரெஸ் என்னுடையது  என்பதுபோல இருப்பதாக நெட்டிசன்கள் விமர்சித்து வருகின்றனர்.