நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் கமல் இன்று மீண்டும் ஆலோசனை

சென்னை :

ற்கனவே தனது நற்பணி மன்ற நிர்வாகிகளுடன், தனது அரசியல் பயணம் குறித்து  இரண்டு நாட்கள் ஆலோசனை நடத்திய நடிகர் கமலஹாசன், இன்று  மீண்டும் தனது நற்பனி மன்ற நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.

சென்னை அழ்வார்பேட்டையில் உள்ள தனது இல்லத்தில், சென்னை, திருவள்ளுர் மாவட்ட நற்பணி இயக்க நிர்வாகிகளுடன் நடிகர் கமலஹாசன், தனது அரசியல் பயணம் குறித்து ஆலோசனையில் ஈடுபட்டு உள்ளார்.

பிப்ரவரி  21ந்தேதி, தனது  அரசியல் கட்சியின் பெயரை அறிவிக்க இருப்பதாகவும்,  முன்னாள் ஜனாதிபதி, அப்துல் கலாம் பிறந்த மண்ணான,  ராமநாதபுரத்தில் இருந்து தனது முதல் அரசியல் அடியை எடுத்து வைக்க இருப்பதாக கூறி உள்ளார்.

அதைத்தொடர்ந்து கடந்த 22ந்தேதி முதல்கட்டமாக ராமநாதபுரம், மதுரை, சிவகங்கை, விருதுநகர்  மாவட்ட  ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்தினார். அதைத்தொடர்ந்து 23ந்தேதி 27 மாவட்ட நிர்வாகிகளை சந்தித்து  அந்தந்த மாவட்ட நிலவரங்கள் குறித்து கேட்டறிந்து ஆலோசனை செய்தார்.

இந்நிலையில், இன்று மீண்டும் சென்னை, திருவள்ளூர் மாவட்ட   ரசிகர் மன்ற நிர்வாகிகளோடு தனது ஆழ்வார்பேட்டை வீட்டில்  கமல்ஆலோசனை நடத்தி வருகிறார். .