ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்! மு.க.ஸ்டாலின்

சென்னை:

என்எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரத்தை கைது செய்ய மத்தியஅரசு தீவிரமாக முயற்சி செய்து வரும் நிலையில், அரசியல் காழ்ப்புணர்வு காரணமாகவே அவர்மீது நடவடிக்கை எடுக்கப்படுவதாக திமுக தலைவர்  மு.க.ஸ்டாலின் குற்றம்சாட்டியுள்ளாா்.

இன்று செய்தியாளர்களை சந்தித்த திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், “ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் ப.சிதம்பரம் மீதான நடவடிக்கைக்கு அரசியல் காழ்ப்புணர்ச்சியே காரணம்,  ப.சிதம்பரம் சட்ட வல்லுநர் என்பதால் இந்த வழக்கை அவர் சட்டரீதியாகவே சந்திப்பார்”  என்று தெரிவித்தார்.

“காஷ்மீரில் ஜனநாயகத்தைப் பாதுகாக்கவும், அரசியல் கட்சித் தலைவர்களை விடுதலைச் செய்யக்கோரியும், திமுக உள்ளிட்ட 14 கட்சிகளின் எம்.பி.க்கள் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் போராட்டம் நடத்த உள்ளதாகவும், டிஆர் முன்னிலையில் இந்த போராட்டம் நடத்தப்படும் என்றும் தெரிவித்தார்.