கீழடி அகழ்வாராய்ச்சியும் அரசியலும் : ஒரு பார்வை

கீழடி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள கீழடியில் நடந்த அகழ்வாராய்ச்சியில் அரசியல் விளையாடி வருவது குறித்த கட்டுரை இது.
பண்டைய காலத்தில் தமிழ்நாட்டில் சிறப்பான நாகரீகம் அமைந்து இருந்ததாக காப்பியங்கள் தெரிவிக்கின்றன. தமிழ்நாட்டின் முக்கிய நதிகளான காவிரியில் பூம்புகாரும் வைகையில் கீழடியும் பெரிய நகரங்களாக திகழ்ந்துள்ளன. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் இங்கு அகழ்வாராய்ச்சி நடத்தினர். கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் மத்திய தொல்லியல் துறை இங்கு மூன்று கட்டங்களாக ஆய்வு நடத்தியது.

இந்த அகழ்வாராய்ச்சிக்கு போதிய நிதி ஒதுக்கீடு செய்யப்படாததால் இருமுறை நின்று போனது. தற்போது மீண்டும் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அகழ்வாராய்ச்சி தொடர்ந்தது. இந்த அகழ்வாராய்ச்சியை கடந்த 2003 மற்றும் 2005ல் நடத்திய சத்தியமூர்த்தி இதுவரை இது குறித்த அறிக்கையை வெளியிடவில்லை. அவர் பணி ஓய்வு பெற்று தற்போது சுமார் பத்து ஆண்டுக்ள் கடந்துள்ளது.
இந்த அகழ்வாராய்ச்சியில் சமீபத்தில் தமிழர்கள் கலாசாரம் பற்றி பல தடயங்கள் கிடைத்துளதாக சொல்லப்பட்டது. இந்த அகழ்வாராய்ச்சியை நடத்தி வந்த தொல்லியல் கண்காணிப்பாளர் அமர்நாத் ராமகிருஷ்ணன் அசாம் மாநிலத்துக்கு பணி இட மாற்றம் செய்யப்பட்டார். அத்துடன் அகழ்வாராய்ச்சி குறித்த அறிக்கையை அவர் அளிக்கக் கூடாது எனவும் அவருக்கு பதிலாக பெங்களூருவை சேர்ந்த தொல்லியல் நிபுணர் அறிக்கையை தயாரித்து அளிப்பார் என அரசு உத்தரவிட்டுள்ளது.
இதற்கு தமிழக அரசியல்வாதிகள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “அகழ்வாராய்ச்சி செய்த அமர்நாத் ராமகிருஷ்ணனுக்கு பதிலாக வேறொருவர் அரிக்கை தயாரிப்பார் என்பது தவறானது. வரலாற்றை மாற்றி எழுத மத்திய அரசு செய்யும் இந்த சதி கண்டனத்துக்குரியது” என அறிக்கை வெளியிட்டுள்ளார்.
வைகோவை தொடர்ந்து தமிழர் தேசிய முன்னணி தலைவர் பழ. நெடுமாறன், மார்க்சிஸ்ட் கட்சியின் பாலகிருஷ்ணன் உள்ளிட்ட பல தலவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். இது குறித்து முன்னாள் தொல்லியல் அதிகார் ஸ்ரீதரன், “பொதுவாக அகழ்வாராய்ச்சி செய்தவர்கள் மட்டுமே அது குறித்து அறிக்கை வெளியிடுவது வழக்கம். ஏனெனில் அவர்களுக்கு மட்டுமே அது குறித்த முழு விவரமும் தெரியும்” என கூறி உள்ளார்.
மாநில அரசு இது குறித்து சரியான பதில் எதையும் தராமல் உள்ளது பலருக்கும் சந்தேகத்தை உண்டாக்கி உள்ளது.

You may have missed