நியூஸ்பாண்ட்:

ஜெயலலிதா இருந்தவரை அமைச்சர்களில் இருந்து அடிமட்டத் தொண்டர்கள்வரை வாய் பொத்தி கைகட்டி நிற்பார்கள். ஆனால் இப்போது நிலைமையே வேறு” என்று அங்கலாய்க்கிறார்கள் அதிமுகவினர்.

அதற்குக் காரணம் இருக்கிறது.

தற்போது அ.தி.மு.கவையும் ஆட்சியையும் தனது பிடியில் வைத்திருக்கும் துணைப்பொதுச்செயலாளர் டி.டி.வி. தினகரன் முன்னிலையிலேயே இரு வி.ஐ.பி.கள் குடுமிபிடி தகராறு நடத்தியிருக்கிறார்கள்!

நடந்தது குறித்து அ.தி.மு.க. வட்டாரத்தில் பேசப்படுவது இதுதான்:

தமிழகத்தின் மேற்கு மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகளுடன் கட்சியின் துணைப்பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் ஆலோசனை நடத்திக்கொண்டிருந்திருக்கிறார்.

அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன், உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மீது சரமாரியாக புகார் தெரிவித்திருக்கிறார்.

டி.டி.வி. தினகரன்

“டெண்டர்கள் அனைத்தையும் தனக்கு வேண்டியவர்களுக்கே அமைச்சர் எஸ்.பி. வேலுமணி கொடுத்துவிடுகிறார். இதனால் கட்சிக்காரர்களுக்கு நம்மால் உதவ முடிவயில்லை. இப்படி இருந்தால் கட்சிக்காரர்கள் எப்படி கட்சிக்கு செலவு செய்வார்கள்” என்று கேட்டிருக்கிறார்.

அதற்கு வேலுமணி, “இப்போது கட்சிக்கு நான்தான் செலவு செய்து வருகிறேன். ஆகவேதான் எனக்கு வேண்டியவர்களுக்குக் கொடுக்கிறேன். அதில் வரும் வருமானம் கட்சி செலவுக்கு பயன்படுகிறது. நீங்கள் ஒன்றும் இதைப்பற்றிக் கவலைப்படவேண்டாம்” என்று ஆக்ரோசமாக சொல்லியிருக்கிறார்.

இதையடுத்து இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடந்திருக்கிறது. ஒருகட்டத்தில் இருவரும் கடுமையான வார்த்தைகளை பறிமாறிக்கொண்டனர். விட்டால் அடிதடி நடந்துவிடும் என்கிற நிலை!

பொள்ளாச்சி ஜெயராமன்

இதைப் பார்த்து அங்கு கூடியிருந்த மேற்கு மாவட்ட நிர்வாகிகளும், டி.டி.வி தினகரனும் அதிர்ந்துபோய்விட்டார்கள்.

அதிரச்சியின் உச்சத்தில் இருந்த டி.டி.வி. தினகரன், சுதாரித்துக்கொண்டு இருவரையும் சமாதானம் செய்திருக்கிறார். அதன் பிறகே இருவரும் அமைதியாகி இருக்கிறார்கள்.

இது குறித்து பத்திரிகையாளர்கள் கேட்டால், “கட்சிககுள் “கருத்து மோதல்கள்” (!) சஜகம். இதையெல்லாம் வெளியில் சொல்வது சரியல்ல” என்கிறார்கள் ஒன்று போல!

இருவருக்கிடையேயான மோதல் சம்பவத்தைத்தான் தற்போது அதிமுகவின் ஆச்சரியமாக பேசி வருகிறார்கள்.

வேலுமணி

“அம்மா இருந்தவரை அவரை நேரடியாக பார்க்கக்கூட பயப்படுவார்கள். இப்போது நிலைமையைப் பார்த்தீர்களா? கட்சியையும் ஆட்சியையும் தன் பிடிக்குள் வைத்திருக்கும் டி.டி.வி. தினகரன் முன்பே கடுமையான வார்த்தைகளால் ஏசிக்கொள்கிறார்கள் அடிக்கப்பாய்கிறார்கள்” என்கிறார்கள் கட்சிக்காரர்கள்.

“ஜெயலலிதா மீது ஆயிரம் விமர்சனங்கள் இருக்கலாம். ஆனால் இவர்களை நிர்வகிக்க அவர்தான் சரியான ரிங்மாஸ்டர்” என்கிறார்கள் அரசியல் விமர்சகர்கள்.