சென்னை:

மிழகத்தில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ள பொள்ளாச்சி பாலியல் துஷ்பிரயோகம் சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட தமிழகஅரசு முடிவு செய்துள்ளது.

தமிழகத்தையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் கொடூர சம்பவங்கள் தொடர்பான வழக்கு தற்போது சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றப்பட்டுள்ள நிலையில்,  வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

கடந்த ஆண்டு பீகார் மாநிலம் முசாஃபர்பூர் ஆதரவற்ற பெண்கள் விடுதியில் வசித்த சிறுமிகள் இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து வந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் அதிர் வலைகளை ஏற்படுத்தியது. இதில் அரசியல்வாதிகள் பலர் சிக்கிய நிலையில், உச்சநீதி மன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி, விசாரணை நடத்தி வருகிறது.

அதுபோலவே பொள்ளாச்சி சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. பொள்ளாச்சி பாலியல் வன் கொடுமை சம்பவத்தில்  வக்கிர புத்தி கொண்ட ஒரு கும்பலிடம், அந்த பகுதியை சேர்ந்த கல்லூரி மற்றும் பள்ளி மாணவிகள் உள்பட பல குடும்ப பெண்கள் உள்பட சுமார் 200க்கும் மேற்பட்டோர்  சிக்கி சீரழிக்கப்பட்டு, அவர்களிடம் இருந்து பணம் பறிக்கப்பட்ட வந்துள்ளது.

இந்தச் சம்பவத்தில் ஈடுபட்ட அனைவரும் கடுமையாகத் தண்டிக்கப்பட வேண்டும் அனைத்து தரப்பினரும் குரல் கொடுத்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சிக் கப்பட்டு வருகிறது. சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் கோரிக்கைகளை வலுப்பெற்றுள்ளன.

தமிழக டிஜிபி, சட்டம் ஒழுங்கை கவனிப்பதில் கவனம் செலுத்த வில்லை என்றும், குட்கா ஊழலில் இருந்து வெளியேறுவது குறித்தே எப்போதும் சிந்தித்து வருவதாகவும், இதன் காரணமாகவே தமிழக காவல்துறை, ஏவல்துறையாக மாறி செயலற்று இருப்பதாக விமர்சிக்கப்படுகிறது.

பாலியல் கொடுமை செய்த பொள்ளாச்சி கும்பலை நடுரோட்டில் வைத்து சுட்டுக்கொல்ல வேண் டும் என்றும், எது எதுக்கோ குரல் கொடுக்கும் மகளிர் அமைப்புகள், மனித உரிமை அமைப்புகள் தற்போது எங்கே சென்றன என்றும் சமூக வலைதளங்களில் கேள்வி எழுப்பி உள்ளன.

மதுரை உயர்நீதி மன்ற கிளை நீதிபதிகளும், இந்த விவகாரத்துக்கு தேசிய ஊடகங்கள் ஏன் முக்கியத்துவம் கொடுக்க மறுக்கிறது என்று கேள்வி எழுப்பி உள்ளனர்.

தற்போது இந்த வழக்கு தொடர்பாக கைது செய்யப்பட்டுள்ளவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


இந்நிலையில், பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கை சிபிஐ விசாரணைக்கு பரிந்துரை செய்ய தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக டிஜிபி அலுவலகம், தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

தொழில்நுட்ப ரீதியான ஆதாரங்களை திரட்டி விசாரணை நடத்த வேண்டியிருந்ததால்தான் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பெண் அதிகாரியை நியமித்து விசாரணை நடத்தப்படும் என்று காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இருப்பினும், வழக்கில் மேலும் கூடுதலான விசாரணை தேவைப்படும் என்ற கோணத்தில் சிபிஐக்கு பரிந்துரைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. பொள்ளாச்சி பாலியல் கொடூர விவகாரத்தில் அதிமுக, திமுக போன்ற அரசியல் கட்சியை சேர்ந்தவர்களும் சிக்கியிருப்பதால், சிபிஐ விசாரணை வேண்டும் எனப் பல்வேறு அமைப்புகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்த சம்பவம் தமிழகஅரசுக்கு பெரும் தலைவலியை கொடுத்துள்ளது. இதன் தாக்கம் நாடாளுமன்றம் மற்றும் சட்டப்பேரவை இடைத் தேர்தலில் எதிரொலிக்கும் என்பதால், சிபிஐ விசாரணைக்கு விட தமிழக அரசு முவு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.