பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, குருடாக்க வேண்டும்: ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா’ மனைவி ஆவேசம்

சென்னை:

பொள்ளாச்சி பாலியல் சம்பவங்களில் தொடர்புடைய குற்றவாளிகளின் ஆண்மையை நீக்கி, அவர்களின் கண்களை  குருடாக்க வேண்டும்’ என்று ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற பெயரில் படம் எடுத்து பரபரப்பை ஏற்படுத்திய  படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா’ மனைவி ஆவேசமாக டிவிட்டரில் பதிவிட்டு உள்ளார்.

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், பல்வேறு தரப்பினரும் குற்றவாளிகளுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கருத்து தெரிவித்து வருகின்றனர்.

இந்த கொடூர செயலுக்கு அரசியல் பின்புலம் இருப்பதாகவும், 20க்கும் மேற்பட்டோர் இந்த நாசகார செயலில் ஈடுபட்டு வந்தாகவும் கூறப்படுகிறது. இவர்களிடம் சிக்கி  200க்கும் மேற்பட்ட பெண்கள் பாலியல் வன்கொடுமை அனுபவித்துள்ளதும், அவர்களை அவ்வப்போது மிரட்டி பணம் பிடுங்கி வந்ததும் தெரிய வந்துள்ளது.

குற்றவாளிகளுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று பிரபலங்கள் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பிரபல படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜாவின் மனைவி தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த கொடூரத்தை செய்தவன்களுக்கு மரண தண்டனை கொடுக்காமல், அவன்களுக்கு ஆண்மையை நீக்கி அவன்களை குருடாக்கி, தனியறையில் அடைத்து பைத்தியக்காரன்களை போல் திரிய வைக்க வேண்டும் என ஆவேசமாக கருத்து பதிவிட்டுள்ளார்.

இவரது கருத்து ஒரு தரப்பினர் ஆதரவு தெரிவித்து வந்தாலும், மற்றொரு தரப்பினர், முதலில் அவர் தனது கணவருக்குத்தான் இந்த தண்டனை கொடுக்க வேண்டும் என்று விமர்சித்து வருகின்றனர்.

கடந்த ஆண்டு  ‘இருட்டு அறையில் முரட்டு குத்து’ என்ற ஆபாசமான படத்தை தயாரித்தவர், பிரபல படத்தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா என்பது குறிப்பிடத்தக்கது.

சினிமா, தொலைக்காட்சி தொடர்கள் போன்றவைதான் நாட்டின் வன்முறைகளுக்கும், பாலியல் தொடர்பான குற்றச்சாட்டுக்கள் அதிகரிக்கும் காரணம் என்றும் சமூக வலைதளங்களில் விமர்சிக்கப்பட்டு வருகிறது.