பொள்ளாச்சி பாலியல் குற்றவாளிகள்: சேலம் சிறைக்கு திடீர் மாற்றம்

சேலம்:

பொள்ளாச்சி பாலியல் வழக்கு தொடர்புடைய குற்றவாளிகள் 5 பேரும் திடீரென சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான குற்றவாளிகள் திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகியோர் இதுவரை கோவையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில்,  பாதுகாப்பு காரணங்க ளுக்காக  தற்போது திடீரென சேலம் சிறைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

பொள்ளாச்சியில் ஏராளமான கல்லூரி மாணவிகள், குடும்ப பெண்கள் உள்பட 300க்கும்  மேற்பட்டோரை பாலியல் பலாத்காரம் செய்து படம் எடுத்து மிரட்டியது தொடர்பாக  வழக்கில் சபரிராஜன் (25), சதீஸ்(28), வசந்தகுமார்(24), திருநாவுக் கரசு(27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையில் அடைதுள்ளது. தற்போது இந்த வழக்கை சிபிஐ விசாரணை நடத்தி வருகிறது.

இந்த வழக்கில்  கடந்த மே 24-ம் தேதி பொள்ளாச்சி பாலியல் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ள 5 பேர் மீது சிபிஐ குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்தது. இதுதொடர்பாக, குற்றவாளிகளை காவலில் எடுத்து காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஜூன் 17-ம் தேதியுடன் அவர்களுக்கு நீதிமன்ற காவல் முடிவடைந்த தால், கடந்த 18-ம் தேதி காணொலி காட்சி மூலம் நீதிபதி முன்பு ஆஜர்ப்படுத்த ப்பட்டனர். அப்போது குற்றவாளிகள் 5 பேருக்கு ஜூலை 1-ம் தேதி வரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், இந்த வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. கைது செய்யப் பட்டுள்ள 5 பேரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக கோவை மத்திய சிறையில் இருந்து சேலம் மத்திய சிறைக்கு அதிரடியாக மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published.