பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திருநாவுக்கரசு உள்பட 5 பேரின் காவல் மே6ந்தேதி வரை நீட்டிப்பு

கோவை:

பொள்ளாச்சியில் நடைபெற்ற நடுநடுங்க வைக்கும் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்கில் 5பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் அவர்களின் காவல் மே 6ந்தேதி வரை நீட்டித்து நீதி மன்றம் உத்தரவிட்டு உள்ளது.

பொள்ளாச்சி பாலியல் கொடூர வழக்கில் சிறையில் உள்ள திருநாவுக்கரசு, சபரிராஜன், சதீஷ், வசந்தகுமார், மணிவண்ணன் ஆகிய 5பேரின் நீதிமன்ற காவல் மே 6ம் தேதி வரை நீட்டிப்பு செய்துள்ளது.

குலைநடுங்க வைத்த பொள்ளாச்சி பாலியல் கொடுமை தொடர்பான வழக்கில் முதலில் 4 பேர் கைது செய்யப்பட்ட நிலையில்,  பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவியின் சகோதரரை தாக்கியது தொடர்பாக  பொள்ளாச்சி ஆச்சிப்பட்டி பகுதியை சேர்ந்த மணிவண்ணன் என்பவரை  கைது செய்த காவல்துறையினர் அவரையும் பாலியல் வன்கொடுமை வழங்கில் சேர்த்துள்ளனர்.

இவர்கள் மீதான ஜாமின் மனு இன்று விசாரணைக்கு வந்தது. அவர்களை விடுவிக்க காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து,  அவர்களது காவலை மே 6ந்தேதி வரை நீட்டித்து நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

You may have missed