சென்னை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையை கண்டித்தும், குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும், பல்வேறு பெண்கள் அமைப்பு இன்று மாலை மனித சங்கிலி போராட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளது.

அனைத்துப் பெண்கள் கூட்டமைப்பு சார்பில் இன்று சென்னையில் மாபெரும் மனிதசங்கிலி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

குலைநடுக்க வைக்கும் பொள்ளாச்சி பாலியம் சம்பவம் தமிழக மக்களிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ள நிலையில்,பல இடங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில், பெண்கள் கூட்டமைப்பு சார்பில் மனித சங்கிலி போராட்டம் நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் நடந்த பாலியல் குற்றத்தை நேர்மையான பெண் காவல்துறை அதிகாரி தலைமையில் உயர்நீதிமன்ற கண்காணிப்பில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும்

பாதிக்கப்பட்ட பெண்ணின் பெயரை வெளியிட்ட காவல் கண்காணிப்பாளர் பாண்டியராஜனை பணியிடை நீக்கம் செய்ய வேண்டும்

உள்பட  பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ‘ அனைத்து பெண்கள் கூட்டமைப்பின்’ சார்பில் இன்று (15-03-19) மாலை 4 மணிக்கு சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகில் மனித சங்கிலி நடைபெறவுள்ளது.

இந்த மனித சங்கிலியில்  பெண்கள், மாணவர்கள், இளைஞர்கள், எழுத்தாளர்கள், படைப்பாளிகள், திரைகலைஞர்கள், பத்திரிகையாளர்கள் என பொதுமக்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

இதுகுறித்த தகவல்களுக்கு ஒருங்கிணைப்புக் குழுவினர்களான  எபி.சுகந்தி (AIDWA)–9442432659 ஜி.மஞ்சுளா (NFIW)–9790752080, செல்வி(மனிதி)-9080535115 ஆகியோரை தொடர்ப்புகொள்ளலாம் என்று அவர்களது போன் எண்களும் அறிவிக்கப்பட்டு உள்ளது.