பொள்ளாச்சி பாலியல் கொடுமை: பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்க சிபிசிஐடி மொபைல் எண் அறிவிப்பு

கோவை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில்  தகவல் தெரிவிக்கலாம் என்று  சிபிசிஐடி அறிவித்து உள்ளது.

குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தி வரும் நிலையில், தமிகம் முழுவதும் கல்லூரி மாணவ மாணவிகள் இந்த கொடுமையால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி வேண்டும் என்றும், கொடூரமான செயலை புரிந்த  பாலியல் கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர் போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.

இது தொடர்பான புகாரை சிபிசிஐடி விசாரிக்க தமிழக அரசு உத்தரவிட்ட நிலையில், தற்போது சிபிஐக்கு மாற்றி உள்ளது.

இந்த நிலையில்,  பொள்ளாச்சி பாலியல் கொடூரத்தில் பாதிக்கப்பட்டவர்கள் தகவல் தெரிவிக்கலாம் என்று சிபிசிஐடி ஐஜி தெரிவித்துள்ளார்.

அதன்படி, பாதிக்கப்பட்டவர்கள், நேரிலோ அல்லது கடிதம் மூலமோ புகார் அளிக்கலாம்.  போன் மூலமும் புகார் அளிக்கலாம் என்று தனியாக ஒரு மொபைல் எண்ணையும்,   இமெயில் முகவரியையும் அறிவித்து உள்ளது.

அலுவலக முகவரி:

காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம்,

குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை

நெ.800, அவிநாசி ரோடு, கோயமுத்தூர்-18

இ.மெயில் முகவரி:  Cbcidcbe@gmail.com

புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்: 9488442993

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உங்களை புகார்களை அனுப்பிவையுங்கள்…