பொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்…

கோவை:

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை தொடர்பாக, பாதிக்கப்பட்டவர்கள் சிபிஐ சிஐடி அலுவலகத் தில்  தகவல் தெரிவிக்கலாம் என்று  சிபிசிஐடி தொலைபேசி எண் மற்றும் இமெயில் அட்ரஸ் தெரிவித்திருந்த நிலையில், இதுவரை 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்துள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் பிரளயத்தை ஏற்படுத்தியுள்ள குலைநடுங்க வைக்கும் பொள்ளாச்சி பாலியல் கொடுமை செய்த  கும்பலை கடுமையாக தண்டிக்க வேண்டும் என்று வலியுறுத்தி  தொடர் போராட்டம் தமிழகம் முழுவதும் நடைபெற்று வருகிறது.

இது தொடர்பான வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி பாலியல் சம்பவம் தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள், பொதுமக்கள் எவரும் சிபிசிஐடி அலுலகத்தில், நேரிலோ,  கடிதம் மூலமோ அல்லது மொபைல் எண், இமெயில் முகவரியும் புகார் கொடுக்கலாம் என அறிவிக்கப் பட்டது.

நேற்று முன்தினம் மாலை சிபிசிஐடி காவல்துறையினர் அறிவித்த மொபைல் எண்ணுக்கு இது வரை  118 பேர் தொடர்பு கொண்டு புகார் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதில், பாதிக்கப்பட்ட பெண்கள், வழக்கு தொடர்பாக கூடுதல் விவரங்கள் தெரிந்தவர்கள் என பலர் புகார் கூறியுள்ளதாக  தெரிகிறது.

ஆனால், அதை உறுதி செய்ய மறுத்த சிபிசிஐடி காவல்துறையினர், புகார் மற்றும் தகவல்கள் தெரிவிப்பவர்கள் குறித்து முறையாக பதிவு செய்யப்படுவதாக தெரிவித்துள்ளனர். கடந்த 24மணி நேரத்தில 100க்கும் மேற்பட்டோர் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இந்த புகாரின் எண்ணிக்கைமேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

பொள்ளாச்சி பாலியல்  தொடர்பாக புகார் கொடுக்க வேண்டிய அட்ரஸ்

அலுவலக முகவரி:

காவல் துணை கண்காணிப்பாளர் அலுவலகம், குற்றப்பிரிவு, குற்றப்புலனாய்வுத்துறை

நெ.800, அவிநாசி ரோடு, கோயமுத்தூர்-18

இ.மெயில் முகவரி:  Cbcidcbe@gmail.com

புகார் கொடுக்க வேண்டிய தொலைபேசி எண்: 9488442993

பாதிக்கப்பட்டவர்கள் தைரியமாக உங்களை புகார்களை அனுப்பிவையுங்கள்…

 

1 thought on “பொள்ளாச்சி பாலியல் கொடுமை: 24 மணி நேரத்தில் 100க்கும் மேற்பட்டோர் சிபிசிஐடி மொபைல் எண்ணுக்கு புகார்…

 1.   பாவ கொடுமைகள் அரங்கேறி வருவது வேதனையான ஓன்று , சட்டம் தன் கடமையை செய்யட்டும் , கொடிய காலங்களில் உலகம் பயணிக்கிறது , நவீன யுகமாக மாறிப்போனது , இதனால் பாவமும் பெருகிப்போனது , இதனால் தீங்கும் பெருகிப்போனது , கொடுமைகள் நித்தம் ஏதாவது ஒரு வகையில் அரங்கேறி வருகிறது ! முழு உலகமும் கைபேசி வாயிலாக உள்ளங்கைக்குள் அடங்கி விட்டது ! அதில் ஏராளமான பாவ தீங்குகள் நிறைந்து காணப்படுகின்றன . எடுத்துக்காட்டாக சாராயக்கடைகள் பெருகிப்போனால் சாராயம் குடிப்பவர்களும் பெருகிப்போவார்கள் , அப்படிதான் ஆபாசங்கள் பெருகிப்போனால் அதன் விளைவுகளும் பெருகிப்போகும் ,மேலும் இதன் விளைவு விரும்பத்தகாத சம்பவங்கள் , கொடுமைகள் அரங்கேறி வருகிறது

   இன்றய நாட்களில் எந்தெந்த வகையில் , வழிகளில் ஆபாசங்கள் , அது தொடர்புடைய வார்த்தைகள் காணப்படுகிறதோ அவைகள் அகற்றப்பட மேலிட அரசும் , மாநில அரசுகளும் முயற்சிக்கலாம் ! ஆபாச நிகழ்வுகளை ஒளிபரப்பு செய்கிற சானல்களை தடை செய்யலாம் ,ஒரு சில செய்தி ஊடகங்களில் கூட இரவு 10 மணிக்கு மேல் sex சம்பந்தப்பட்ட பொருள்களை விற்பதர்க்காக ஆபாச காட்சிகளை போடுகிறார்கள் , இது தடை செய்யப்பட்டால் நல்லது , போதை பொருட்கள் எங்கிருந்தாலும் அவைகள் தடை செய்யப்பட வேண்டும் , இதனால் பெரும் சீரழிவு , மூன்று துறையினர் மக்கள் பிரச்சினைகளில் நெருங்கிய தொடர்புடையவர்கள் ,

  ஓன்று காவல்துறை , மற்றொண்று , lawyers , 3 வதாக நீதித்துறை இவர்கள் விழிப்புடனிருந்தால் சமுதாயம் சீர்படும் , அடுத்து கல்வி நிறுவனங்களில் மாணவ மாணவிகளுக்கு எதிர்கால நலன் கருதி நல் அறிவுரைகள் வழங்கலாம் ,

     மக்கள் கூடுகிற இடங்களில் கூட பள்ளி மாணவ மாணவிகள் சீருடையில் நின்று கொண்டு ஆண்பாலருடன் பேசிக்கொண்டிருக்கிறார்கள் , காவல்துறையினர் இவர்களை அணுகி விசாரித்து சற்று கண்டிப்புடன் அறிவுரைகள் வழங்கினால் பயம் உண்டாகும் , துணிகரமான பாவங்கள் குறையலாம் !

     ஜிக்கி தன் பெற்றாருக்கு ஒரே மகன் , அவனை செல்லமாக வளர்த்தனர் , அவன் விரும்புவதையெல்லாம் வாங்கி கொடுத்தனர் , சிறு வயதிலேயே நண்பர்களுடன் சேர்ந்து குடிக்கும் , போதை வஸ்துக்கும் அடிமையானான் , விலைமகளின் சுவாசமும் அவனை தொற்றிக்கொண்டது , இதுதான் வாழ்வு என்று கனவு கண்டான் ,, 17 வயது இருக்கும் , அப்போது அவன் வியாதிப்பட்டான் , அவனை மருத்துவரிடம் கொண்டு பரிசோதித்தபோது தீரா வியாதியினால் பீடித்திருப்பதை அறிவித்தார்கள் , எலும்பும் தோலுமானான் அவன் அருகில் செல்ல யாரும் விரும்பவில்லை , தாய் அவன் அருகில் சென்று கண்ணீர் வடித்தார் , ஆனால் அந்த தாய்க்கு மறுமொழி சொல்ல அவனில் வார்த்தைகள் இல்லை , இதுதான் தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட ஒரு பிள்ளையின் முடிவு , வேதத்தில் ஒரு வார்த்தை உண்டு ,

     நீதிமொழிகள் 29:15; தன் இஷ்டத்திற்கு விடப்பட்ட பிள்ளையோ தன் தாய்க்கு வெட்கத்தை உண்டுபண்ணுகிறான்.

    பாவத்தின் சம்பளம் மரணம் பின்பு நரகம் அது நிரந்தரமே என்பதை அறிந்தால் எவ்வளவு நல்லது

     

      

Leave a Reply

Your email address will not be published.