வாக்குப்பதிவு முறைகேடு – கைது செய்யப்பட்ட முகவர்

ஃபரிதாபாத்: உத்திரப்பிரதேச மாநிலம் ஃபரிதாபாத்தில் ஒரு வாக்குச்சாவடியில் வாக்காளரின் மீது செல்வாக்கு செலுத்த முயன்ற வாக்குச்சாவடி முகவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வாக்குச்சாவடியில் வைக்கப்பட்டிருந்த கேமராவின் மூலம் அவர் அவ்வாறு செய்தது உறுதிபடுத்தப்பட்டது.

இதுகுறித்து தனது டிவிட்டரில் பதிவிட்டுள்ள மாவட்ட தேர்தல் அதிகாரி அசோக் லாவாசா, அங்கே தேர்தல் நடத்தப்பட்ட விதம் திருப்தியளிக்கவில்லை எனவும், மறுதேர்தல் நடத்த உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

கைது செய்யப்பட்ட அந்த முகவரின் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், அந்த சம்பவம் குறித்து முழு விசாரணையும் நடைபெற்று வருகிறது. விசாரணை அறிக்கையின்படி, அடுத்தகட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார்ட்டூன் கேலரி