புதுடெல்லி:

542 மக்களவை தொகுதிகளில் தேர்தல் நிறைவு பெற்றுள்ளதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.


17-வது மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்றது. 7-வது கட்ட வாக்குப் பதிவு 59 தொகுதிகளில் இன்று நடந்தது.

இதில் மொத்தம் 918 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதனையடுத்து 542 தொகுதிகளுக்கு வாக்குப் பதிவு நிறைவு பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்த தேர்தலில் நாடு முழுவதிலும் இருந்து 7.27 கோடி பேர் வாக்களித்தனர்.

மாலை 6 மணி நிலவரப்படி மொத்தம் 60.21% வாக்குகள் பதிவாகின. அதிகபட்சமாக மேற்கு வங்க மாநிலத்தில் (9தொகுதிகள்) 73.05% வாக்குகள் பதிவாயின.

பீகாரில் 8 தொகுதிகளுக்கு நடந்த தேர்தலில் 49.92%, இமாச்சலப் பிரதேசத்தில் 4 தொகுதிகளில் 66.18%, மத்தியப் பிரதேசத்தில் 8 தொகுதிகளில் 69.38%,பஞ்சாபில் 13 தொகுதிளில் 58.81%, ஜார்கண்டில் 3 தொகுதிகளில் 70.5%, சண்டிகரில் ஒரு தொகுதியில் 63.57% வாக்குகள் பதிவாயின.

நாடு முழுவதும் நடந்த பதிவான வாக்குகள் மே 23-ம் தேதி எண்ணப்படும். அதற்கான நடவடிக்கையை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வருகிறது.