ஏப்ரல் 18ல் வாக்குப்பதிவு: தமிழகத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி தீவிரம்…..

சென்னை:

மிழகத்தில் வரும் 18ந்தேதி வாக்குப்பதிவு நடை பெற உள்ள நிலையில், வாக்குப்பதிவு இயந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னங்கள் பொருத்தும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் மற்றும் 18 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  இன்றும் 8 நாளில் நடைபெற உள்ளது. இதன் காரணமாக அரசியல் கட்சிகள் தேர்தல் பிரசாரத்தில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.

தேர்தலையொட்டி தமிழகத்தில்  67 ஆயிரத்து 720 வாக்குச்சாவடி அமைக்கப்பட உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் தெரிவித்துள்ளார். 16க்கும் மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளில் ஒன்றுக்கு மேற்பட்ட வாக்குப்பதிவு இயந்திரங்கள் அமைக்கப்பட உள்ளது.

இந்த  வாக்குப்பதிவு இயந்திரங்களில் அந்த தொகுதிகளில் போட்டியிடும் வேட்பாளர்கள் சின்னம் மற்றும் பெயர் பொருத்தும் பணி தமிழகம் முழுவதும் தொடங்கி தீவிரமாக  நடைபெற்று வரு கிறது. இந்த பணி நிறைவடைய இன்னும் ஓரிரு நாட்கள் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வாக்குபதிவு எந்திரங்களில் வேட்பாளர்களின் சின்னம் மற்றும் பெயர்களை பொருத்தும் பணி தொடங்கி விறுவிறுப்பாக நடை பெற்று வருகிறது. இதை அந்தந்த பகுதியில் உள்ள தேர்தல் அதிகாரிகள் பார்வையிட்டு வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published.