பாட்னா

பீகார் முதல்வர் நிதிஷ் குமார் இன்று வாக்களித்த பிறகு தேர்தல்கள் இவ்வளவு நீண்ட நாட்கள் நடக்கக் கூடாது என தெரிவித்துளார்.

கடந்த மாதம் 11 ஆம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது. ஏழு கட்டமாக நடந்த வாக்குப்பதிவில் இன்று இறுதிக் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்றைய இறுதிக்கட்ட வாக்குப்பதிவி 59 தொகுதிகளுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெற்று வருகின்றன. இன்று காலை 7 மணிக்கு வாக்குப் பதிவுகள் தொடங்கின.

இன்று வாக்குப்பதிவு நடைபெறும் கோரக்பூர் தொகுதியில் உ பி முதல்வர் யோகி அதியநாத், அமிர்தசரசில் கிரிக்கெட் வீரர் அர்பஜன் சிங், பாட்னா வில் பீகார் முதல்வர் நிதிஷ் குமார் உள்ளிட்டோர் வரிசையில் நின்று வாக்கு அளித்தனர். பீகார் முதல்வர் நிதிஷ் குமார் வாக்களித்த பிறகு செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.

அப்போது நிதிஷ் குமார், ”இவ்வளவு நீண்ட நாட்கள் மக்களவை தேர்தலை நடத்தக் குடாது. இவ்வளவு நீண்ட நாள் இடைவெளி விட்டு ஒவ்வொரு கட்ட வாக்குப்பதிவும் ந்டத்த தேவை இல்லை. தற்போது நிலவி வரும் கடும் கோடையில் இவ்வாறு வாக்குப் பதிவு நடப்பது அனைவருக்கும் தொல்லை தரும் செயலாகும். இனி வரும் தேர்தல்களை குறைந்த கால கட்டத்தில் நடத்துவது குறித்து நான் அனைத்து கட்சிகளுக்கும் கடிதம் எழுத உள்ளேன்” என தெரிவித்தார்.