டெல்லி:

பொருளாதார ரீதியாக வளர்ந்து வரும் நாடுகளின் பட்டியலில் இந்தியாவும், சீனாவும் இடம்பெற்றுள்ளது. அதே சமயம் காற்று மாசு ஏற்படுவதிலும் இரு நாடுகளும் முன்னிலையில் உள்ளது. 2000ம் ஆண்டுக்கு பிறகு வெளிப்புற காற்று மாசு பாதிப்பு காரணமாக இறந்தவர்களின் எண்ணிக்கை சீனாவை விட இந்தியாவில் அதிகமாக உள்ளது.

முதன் முதலாக 1990ம் ஆண்டு மாசு பாதிப்பு காரணமாக சீனாவை விட இறப்பு சதவீதம் அதிகமாக இருந்து. அதாவது. 11.98 லட்சம் இந்தியாவிலும், 11.80 லட்சம் சீனாவிலும் இறப்போர் எண்ணிக்கை இருந்தது. 18 ஆயிரம் உயிர் பலி இந்தியாவில் அதிகமாக இருந்தது. இரு நாடுகளிலும் இந்த இறப்பு எண்ணிக்கை பெரும் அச்சுறுத்தலாக இருந்து வருகிறது.

லட்சம் பேர் கொண்ட மக்கள் தொகை என்ற அடிப்படையில் பார்த்தால் சீனாவை விட இந்தியாவில் இறப்பு சதவீதம் அதிகமாக உள்ளது. சீனாவில் 2 லட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். இது ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு 87 முதல் 88 பேர் இறப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன. 15 ஆண்டுகளுக்கு பிறகு ஒரு லட்சம் மக்கள் தொகைக்கு இந்தியர்களின் இறப்பு சதவீதம் 91ஆக உயர்ந்துள்ளது. தற்போது சீனாவில் 85ஆக உள்ளது.

சமையலுக்கு திட எரிபொருள் பயன்படுத்துவதன் மூலம் ஏற்படும் இறப்பு இதில் சேர்க்கப்படவில்லை. 1990ல் உள் காற்று மாசு பாதிப்பினால் இந்தியாவில் 9.13 லட்சம் பேரும், சீனாவில் 10.42 லட்சம் பேரும் இறந்துள்ளனர். 25 ஆண்டுகள் கழித்து இந்தியா 9.77 லட்சம் என்றும், சீனா 5.90 லட்சம் என்ற நிலையிலும் இருந்தது.

வீட்டு சமையலுக்கு எல்பிஜி மற்றும் அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (சிஎன்ஜி) ஆகிவற்றை ஊக்குவித்ததன் மூலம் உள்நாட்டு மாசு பாதிப்பு இந்தியாவில் குறைந்துள்ளது. கார், மின் நிலையங்கள், தொழிற்சாலை ஆகியவை வெளிப்புற காற்றை மோசமான அளவில் பாதிப்படைய செய்கிறது.

2015ம் ஆண்டு அறிக்கையின் படி, இந்தியாவில் 3வது உடல்நல ஆபத்தை ஏற்படுத்த கூடிய காரணியாக இது இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலக்கரி பயன்படுத்தும் மின் உற்பத்தி நிலையங்கள் மூலம் அதிகளவில் வெளிப்புற மாசு பாதிப்புக்கு வலுவான காரண கர்தாவாக உள்ளது.

பழமையான இந்த முறை மற்றும் தரம் குறைவு போன்றவற்றால் பாதிப்பு அதிகமாகிறது. அதனால் சுகாதாரமான தொழில்நுட்பத்திற்கு விரைந்து மாற வேண்டும் என்று 2015ம் ஆண்டில் மத்திய சுகாதார துறையின் காற்று மாசு மற்றும் சுகாதார தொடர்பான பிரச்னைகளுக்கான நிலைக்குழு தனது அறிக்கையில் தெரிவித்திருந்தது.

மேலும், மின் உற்பத்தி நிலையங்களின் தரம், நைட்ரஜன் ஆக்ஸைடின் தரம், சல்பர் டை ஆக்ஸைடு ம்றறும் மெர்குரியின் எரியும் தன்மையை குறைக்க வேண்டும் போன்ற கருத்தக்களை தெரிவித்திருந்தது. ஆனால், 2005ம் ஆண்டு முதல் தூய்மை தொழில்நுடபங்கள் இன்றி நிலக்கரி பயன்பாடு இரண்டு மடங்கு அதிகரித்தது. இதே காலகட்டத்தில் சீனா நிலக்கரி கொள்முதலில் 50 சதவீத வளர்ச்சி மட்டுமே கண்டுள்ளது.

2004ம் ஆண்டு முதல் நச்சு கலந்தி ரசாயன உமிழ்தலுக்கு கட்டுப்பாடு உள்ளிப்பட பல நடவடிக்கை அந்நாடு எடுத்தது. உமிழ்தலுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை 2012ம் ஆண்டில் அமல்படுத்தப்பட்ட பிறகு தொழிற்சாலைகளுக்கான மின் கட்டணத்தை சீனா உயர்த்தியது. 41 பில்லியன் டாலர் செலவில் ரசாயன உமிழ்தலை தடுப்பதற்கான உபகரணங்களை நவீனபடுத்த இந்த கட்டண உயர்வு கொண்டு வரப்பட்டது.

அனல் மின் நிலையங்களுக்கான உமிழ்தல் கட்டுப்பாடை இந்தியா 2015ம் ஆண்டில் தான் கொண்டு வந்தது. அதுவும் 2 ஆண்டுகள் அவகாசம் கொடுக்கப்பட்டிருந்தது. தற்போது 400க்கும் மேற்பட்ட அனல் மின் நிலையங்கள் செயல்படுகிறது. இதற்கு கட்டுப்பா டுகளை தளர்த்தவம், அவகாசத்தை நீட்டிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்தியாவில் தீபாவளிக்கு தொடர்ந்து பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்பட்டு வருகிறது. அதே சமயம் சீனாவின் புத்தாண்டு பட்டாசு விற்பனைக்கும், வெடிக்கவும் 700 நகரங்களில் கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. வியாபாரிகளின் எண்ணிக்கையையும் குறைத்து, பெயிஜிங் குடிமகன்களுக்கு 5 பெட்டிகளுக்கு மேல் பட்டாசு வாங்க அனுமதி மறுக்கப்படுகிறது. ஆனால், இந்தியாவில் 10 ஆண் டுகளுக்கு முந்தை டீசல் வாகனங்களை தடை செய்ய எதிர்ப்பு தெரிவித்து உச்சநீதிமன்றத்தை மத்திய அரசு நாடியுள்ளது.

வாகனங்களுக்கான எரிபொருள் நுகர்வை 100 கி.மீ.க்கு 6.9 லிட்டரில் இருந்து 5 லிட்டர் வரை குறைக்க 2016&20ம் ஆண்டில் சீனா இலக்கு நிர்ணயம் செய்துதுள்ளது. ஆண்டுக்கு 6.2 சதவீதம் என்ற அடிப்படையில் இது இருக்கும். மாசு பாதிப்பை ஏற்படுத்தும் 6 மில்லியன் வாகனங்களை அழிக்கவும் முடிவு செய்துள்ளது. மின் வாகன திட்டத்தை விரைந்து செயல்படுத்த சீனா தீவிரம் காட்டி வருகிறது.

2005ம் ஆண்டில் இந்தியாவில் 9.7 லட்சம் பேரும், சீனாவில் 12.2 லட்சம் பேரும் காற்று மாசு பாதிப்பினால் இறந்துள்ளனர். இந்த நிலை நீடித்தால் அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியாவில் 12 லட்சம் பேரும், சீனாவில் 11.8 லட்சம் பேரும் இறக்கும் நிலை இரு க்கும். இந்தியாவில் 24 சதவீதம் அதிகரிப்பும், சீனாவில் 3 சதவீத குறைவும் இருக்கும்.