பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து: அரசுக்கு மதுரை உயர்நீதி மன்றம் நோட்டீஸ்

சென்னை:

மிழகத்தில் கடந்த ஆண்டு நடைபெற்ற பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வில் முறைகேடு நடைபெற்றதாக வந்த புகார்களை தொடர்ந்து, கடந்த 9ந்தேதி பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து செய்து தமிழ்நாடு அரசு தேர்வு வாரியம் நடவடிக்கை எடுத்தது.

இந்நிலையில், பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்தை எதிர்த்து வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், வரும் 22ந்தேதிக்குள் பதில் அளிக்க, மதுரை உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது. அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 7ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதையடுத்து இதுகுறித்து விசாணை நடைபெற்ற நிலையில், 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்நிலையில் பாலிடெக்னிக் விரிவுரையாளர் நியமனத் தேர்வை ரத்து செய்வதாக கடந்த 9ந்தேதி ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்தது.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து,  சிவகங்கையைச் சேர்ந்த இளமதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்துள் ளமனுவில், 1,33,567 பேர் தேர்வு எழுதியதில் 200 பேரின் விடைத்தாளில் முறைகேடு நடந்துள்ளது என்றும், அந்த 200 பேருக்காக . அனைவரையும் தண்டிப்பது ஏற்கக் கூடியதல்ல. எனவே எழுத்துத்தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தன்னை விரிவுரையாளராக நியக்க வேண்டும் என கோரியிருந்தார்.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த மதுரை உயர்நீதி மன்றம், இதுகுறித்து, வரும் 22ம் தேதிக்குள் பதிலளிக்க ஆசிரியர் தேர்வு வாரிய தலைவர், பள்ளிக் கல்வித்துறை செயலருக்கு உத்தரவிட்டது.

பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு ரத்து குறித்த முந்தைய செய்தி…

https://patrikai.com/wp-admin/post.php?post=779055&action=edit