சென்னை:

மிழகத்தில் அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த செப்டம்பர் மாதம் எழுத்துத்தேர்வு நடத்தியது.

இதில் முறைகேடுகள் நடைபெற்றதாக கூறப்பட்டது. அதையடுத்து இதுகுறித்து விசாணை நடைபெற்ற நிலையில், 100 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.

அரசு பாலிடெக்னிக்ல் பணியாற்றும் விரிவுரையாளர்  1,058 பேர் தேர்வு செய்வதற்கான தேர்வு அறிவிப்பு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அறிவிக்கப்பட்டு தேர்வு நடைபெற்றது.

இந்த தேர்வு எழுத தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 70 ஆயிரத்து 363 பேர் விண்ணப்பித்து இருந்தனர்.  இதற்காக 84 தேர்வு  மையங்கள் அமைக்கப்பட்டன. சென்னையில் 31 ஆயிரம் பேர் தேர்வு எழுதினர்.

அதைத்தொடர்ந்து கடந்த நவம்பர் 7ந்தேதி தேர்வு முடிவுகள் வெளியானது.

இதில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றுள்ளதாக ஏராளமான புகார்கள் குவிந்தன. அதைத் தொடர்ந்து தேர்வு முடிவுகளை ரத்து செய்யப்பட்டதாக கூறப்பட்டது.

அதைத்தொடர்ந்து, தேர்வு எழுதியவர்களின் விடைத்தாளான  ஓ.எம்.ஆர். நகல் இணையதளத்தில் வெளியிடப்பட்டது. அதில் நிறைய குளறுபடிகள் இருந்தாகவும், மதிப்பெண் வித்தியாசம் உள்ளதாகவும் நிரூபணமானது.

இந்த முறைகேட்டில், ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்நிலையில், தேர்வு எழுதியவர்களில் 196 பேர் மீது ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் சமீபத்தில் புகார் செய்யப்பட்டது.

இதுகுறித்த விசாரணையில், விடைத்தாள் திருத்தம் செய்தவர்கள், குறுக்குவழியில் வேலையில் சேர முயன்றவர்கள் என 100-க்கும் மேற்பட்டோர் மீது 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளது.

இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.