அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது: அமெரிக்கா கருத்து

வாஷிங்டன்: அண்டை நாடுகளை மிரட்டு வரும் சீனாவின் போக்கு வன்மையாகக் கண்டிக்கத்தக்கது என்று அமெரிக்கா கூறி உள்ளது.

லடாக் விவகாரத்தில் சீனா-இந்தியா ராணுவத்தினர் இடையேயான மோதலில் சீன வீரர்கள் 43 பேர் உயிரிழந்தனர். இந்திய தரப்பில் 20 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர்.

இந்த தாக்குதல் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது. எல்லை விவகாரத்தில் சீனாவின் போக்கை வன்மையாக கண்டித்துள்ளது. சீனாவின் இந்த அத்துமீறிய தாக்குதல் குறித்து அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ கூறி இருப்பதாவது:

தென் சீன கடலில் ராணுவ தளம் அமைத்து அராஜகத்தில் சீனா ஈடுபடுகிறது. அண்டை நாடுகளை மிரட்டும் சீனாவின் போக்கு வன்மையாக கண்டிக்கத்தக்கது. இந்தியாவின் மீதான தாக்குதல் அண்டை நாடுகள் மீது சீனா கொண்டுள்ள அராஜகப் போக்கைக் காட்டுகிறது.

ஜனநாயகம், சுதந்திரம் இதை விரும்புவர்கள் சீனாவின் சர்வாதிகார கம்யூனிஸ அரசை எதிர்க்க வேண்டும். சீன இஸ்லாமியர்களை குறிவைத்து அதிபர் ஜின்பிங் நடந்து கொள்வது மனித உரிமை மீறல் என்று கண்டித்துள்ளார்.