’பொன் மாணிக்கவேல்’ ரிலீஸ் தேதி அதிகாரபூர்வ அறிவிப்பு…!

பிரபுதேவா உதவி இயக்குநராக பணிபுரிந்து வரும் முகில் இயக்கத்தில் உருவான படம் ‘பொன் மாணிக்கவேல்’.

தமிழகத்தின் சிலை கடத்தல் தடுப்புப் பிரிவு டி.ஐ.ஜி.யான பொன் மாணிக்கவேலின் வாழ்க்கையில் நடந்த சம்பவங்களை அடிப்படையாக வைத்து இந்தப் படம் உருவாகியிருப்பதாகக் கூறப்படுகிறது.

பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனப் படக்குழுவினர் அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளனர்.

இந்தப் படத்தில் பிரபுதேவா ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். மறைந்த இயக்குநர் மகேந்திரன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தம், பிரபாகர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.