சென்னை:

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு தமிழகத்தி்ல் கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இந்நிலையில் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன்  இதுகுறித்து தனது கருத்தை தெரிவித்துள்ளார்.

மத்திய அரசாக இருந்தாலும் மாநில அரசாக இருந்தாலும் ஒரு திட்டத்தை முன் வைத்தால் அதை எதிர்க்காமல்  ஆழமாக சிந்தித்து, பரிசீலிக்கவேண்டும் என்றும், அந்த திட்டத்தால் கிடைக்கப்போகும் பயன்கள் என்ன, திட்டத்தால் விளையப்போகும் தீங்கு என்ன என்பதை சீர்தூக்கிப்  பார்க்க வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

மேலும் அவர்,  மற்றவர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக திட்டத்தை யாரும் எதிர்க்க கூடாது என தெரிவித்திருக்கும் அமைச்சர் பொன்.ராதா, ஹைட்ரோ கார்பன் திட்டம் குறித்து இதுவரை முழு விபரம்  வெளியிடாத நிலையில் அதற்குள் மக்கள் போராட்டம், உண்ணாவிரதம் என எதிர்ப்பு தெரிவிப்பதேன் என வினவியுள்ளார்.

“ இப்படி பேசுவதால் நான் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ஆதரிக்கிறேன்என்று அர்த்தம் கிடையாது” எனவும் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

முன்னதாக கூடங்குளம் அணுமின் திட்டம், ஜல்லிக்கட்டு போன்ற விவகாரங்களிலும் இப்படி ஆதரவு ஆதரவில்லை – நடக்கும், நடக்காது என்று குழப்படியான கருத்துக்களை சொல்லிவந்தார் பொன்.ராதா என்பது குறப்பிடத்தக்கது