விமான நிலையம் வராமல் தடுக்க வினோத காரணம் சொன்ன தமிழக அரசு

கோவளம்

த்திய அரசு கன்னியாகுமரி மாவட்டத்துக்கு அளிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு தடுப்பதாக மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன் கூறி உள்ளார்.

தமிழ்நாட்டில் உள்ள ஒரே பாஜக பாராளுமன்ற உறுப்பினர் பொன். ராதாகிருஷ்ணன்.   இவர் மத்திய நிதித்துறையில் இணையமச்சராக பதவி வகிக்கிறார்.   நேற்று தமிழகத்தில் உள்ள கன்னியாகுமரி மாவட்டத்தில் கோவளத்தில் சரக்கு பெட்டக மாற்று முனைய வர்த்தக துறைமுகம் குறித்து ஒரு சந்திப்பு நிகழ்ந்தது.

இந்த சந்திப்பில் இந்த துறைமுகம் அமைவதன் அவசியம் மற்றும் அதனால் ஏற்பட உள்ள பயன்கள் குறித்து விவாதிக்கப் பட்டது.   இந்த சந்திப்பில் மத்திய அமைச்சர் பொன்.  ராதாகிருஷ்ணன் கலந்துக் கொண்டார்.   அப்போது அவர் உரை ஆற்றினார்.

அவர் தனது உரையில், “கன்னியாகுமரி மாவட்டத்துக்கு மத்திய அரசு அளிக்கும் நலத் திட்டங்களை மாநில அரசு வினோதமான சாக்கு போக்குகள் கூறி வர விடாமல் தடுத்து விடுகின்றன.   கன்னியாகுமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க மத்திய அரசு முயன்றால் அது கொக்கு முட்டை இடும் இடம் என தமிழக அரசு கூறுகின்றனர்.   மத்திய அரசு கடல் வழி போக்குவரத்துக்கு திட்டம் வகுத்தால் அதனால் மீன்பிடி வலைகள் நாசமாகும் என கூறுகின்றது.”  என தமிழக அரசை சாடி உள்ளார்.