ரஜினி ரசிகையான கிரண்பேடி ஐ.பி.எஸ்.!

சூப்பர் ஸ்டார் ரஜினியின் தீவிர ரசிகையாகவே ஆகிவிட்டார் புதுவை துணை நிலை ஆளுநர் கிரண்பேடி.

“பாண்டிச்சேரி அரசு ஊழியர்களுக்கு கபாலி பட டிக்கெட் இலவசமாக வழங்கப்படும்” என்று மாவட்ட ஆட்சித்தலைவர் சொல்ல.. அதை மகிழ்ந்து பாராட்டினார் கிரண்பேடி. அதோடு, “பாண்டிச்சேரி மாநில விளம்பர தூதராக ரஜினி வரவேண்டும்” என்று கோரிக்கையும் வைத்தார்.

Kiran bedi_edit_edit

இந்த நிலைியல், கபாலி படத்தின் புதுவை மாநில விநியோக உரிமையை வாங்கி உள்ள லெஜண்ட்ஸ் மீடியா அதிபர் ஜி.பி.செல்வகுமார், கிரண்பேடியை நேரில் சந்தித்து,  “திருட்டு வி.சி.டி. யை முற்றிலும் ஒழிக்க நடவடிக்கை எடுக்கை எடுக்க வேண்டும்” என்று கோரிக்கை வைத்தார்.

“டெபனட்லி.. டெபனட்லி”  என்று ஆமோதித்த கிரண்பேடி, “ரஜினி ஈஸ் ய குட் ஆக்டர் அண்ட் பெஸ்ட் ஆக்டர்!” என்று புகழ்ந்து தள்ளிவிட்டார். அதோடு, தங்கள் ஏரியாவை சுத்தமாக வைத்திருக்கும் பாண்டிச்சேரிவாசிகளை தேர்ந்தெடுத்து கபாலி படத்தின் முதல் நாள் முதல் காட்சிக்கான டிக்கட் வழங்கப்படும் என்றும் அறிவித்துவிட்டார்!

ம்..  பாண்டிச்சேரியின் தி பெஸ்ட் ரஜினி ரசிகை என்றால் அது கிரண்பேடிதான்! (போலீஸ் வேடத்தில் ரஜினி நடித்த மூன்று முகம்,  பாண்டியன் படங்களை எல்லாம் ஒரிஜினல் டி.வி.டியில் பார்த்திருப்பாரோ..)

கார்ட்டூன் கேலரி