Random image

புதுவை சட்டசபை வளாகத்தில் பிளாஸ்டிக் தடை கோரி பாஜக எம்எல்ஏ போராட்டம்

புதுச்சேரி:

மாநிலத்தில் பிளாட்டிக்குக்கு தடை விதிக்க வேண்டும் என்று பாஜக எம்எல்ஏ , புதுச்சேரி சட்டமன்ற வளாகத்தில் போராட்டம் நடத்தினார்.

நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில்  பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டு உள்ளது. தமிழகத்தி லும் நாளை முதல் பிளாஸ்டிக் தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில்,  புதுவையிலும் பிளாஸ்டிக்கை தடை செய்யக்கோரி பா.ஜனதா எம்எல்ஏ சட்டமன்ற வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

புதுச்சேரி பாஜ எம்எல்ஏ சாமிநாதன்

50 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் பொருட்களை தயாரிக்க ஏற்கனவே புதுவையில் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், பிளாஸ்டிக் பைகள் போன்றவை விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

தமிழகத்தை போல பிளாஸ்டிக்கை தடை செய்ய வேண்டும் என பா.ஜனதா மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் கோரி வருகின்றன. இந்த நிலையில்,  இன்று புதுச்சேரி நியமன எம்எல்ஏ  சாமிநாதன்  சட்டமன்ற வளாக படிக்கட்டில் கையில் பிளாஸ்டிக் தடை கோரிய பதாதைகளை வைத்துக் கொண்டு கோ‌ஷம் எழுப்பினார். பா.ஜனதா எம்.எல்.ஏ.வின் திடீர் போராட்டம் சட்டசபை வளாகத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.