புதுவை: திமுக- காங். கூட்டணி வெற்றி: எக்ஸிட்போல் முடிவுகள்

--

download (1)

புதுச்சேரி: “புதுச்சேரி சட்டசபை தேர்தலில் ஆளும் என்.ஆர். காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுக்கும்.  திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சியைக் கைப்பற்றும்”  என்று  எக்ஸிட்போல் முடிவுகள் தெரிவிக்கின்றன.

புதுச்சேரியின் 30 தொகுதிகளுக்கான வாக்குப் பதிவு இன்று நடந்து முடிந்தது. . இந்த வாக்குப் பதிவு முடிவடைந்த நிலையில் தேர்தலுக்குப் பிந்தைய கருத்து கணிப்புகளை இந்தியாடுடே- ஆக்சிஸ் மை இண்டியா மற்றும் சிவோட்டர் ஆகியவை வெளியிட்டன. .

புதுவையில் ஆளும் என்.ஆர்.காங்கிரஸ் படுதோல்வியை தழுவும் என்றும் திமுக- காங்கிரஸ் கூட்டணி ஆட்சிக் கட்டிலில் அமரும் என்றும் இந்த கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.

இந்தியாடுடே- மை இண்டியா எக்ஸிட் போல் முடிவுகள்: திமுக- காங்கிரஸ் கூட்டணி: 15-21 என்.ஆர்.காங்கிரஸ்: 8-12 அதிமுக: 1-4 மற்றவை – 2

சிவோட்டர் முடிவுகள்: திமுக- காங்கிரஸ் கூட்டணி: 14 என்.ஆர். காங்கிரஸ்: 9 அதிமுக- 5 மற்றவை – 2