5 மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு: புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு

5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு அறிவிக்கப்பட்டதற்கு புதுவை சட்ட மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, மறியலில் ஈடுபட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

புதிய கல்விக்கொள்கை பரிந்துரைப்படி, 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தந்த மாநில அரசுகள் இது தொடர்பாக முடிவுகளை எடுக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்திருந்த நிலையில், சமீபத்தில் தமிழக அரசு அந்த உத்தரவை அமல்படுத்தியது.

இந்நிலையில் 5ம் வகுப்பு மற்றும் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்தப்பட உள்ளதை எதிர்த்து புதுவை சட்டக்கல்லூரி மாணவர்கள், புதிய பேருந்து நிலையம் அருகே திடீரென மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது.