Random image

புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா?

புதுச்சேரி: புதுச்சேரியில் இன்று சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம்! வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்படுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

சட்டமன்றம் 6 மாதத்திற்கு ஒருமுறை கூட்டப்பட வேண்டும் என்பது அரசியல் சாசன சட்டத்தின் விதிமுறை. புதுச்சேரியில்,கடந்த ஆண்டு (2020)  ஜூலை 20-ம் தேதி முதல் 25-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்றது. பின்னர் கொரோனா தொற்று காரணமாக சபை கூட்டப்படாமல் இருந்து வந்தது.

இந்த நிலையில்,  இன்று காலை 10.15 மணிக்கு சட்டப்பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெறும் என அறிவிக்கப்படடது.  இன்றைய கூட்டத்தொடரில், மத்தியஅரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களுக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக, வேளாண் சட்டத்துக்கு எதிராக தீர்மானம் கொண்டு வர எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி பேரவை முன் பாஜக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. பாஜகவை சேர்ந்த நியமன எம்.எல்.ஏ.க்கள் 2 பேர் சட்டப்பேரவை முன் போராட்டம் நடத்தி வருகினறனர்.