புதுச்சேரி ஓம்சக்தி சேகர் அதிமுகவில் இருந்து நீக்கம்! சசிக்கு எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியல்

புதுச்சேரி,

திமுகவில் ஏற்பட்டுள்ள உள்கட்சி பிரச்சினையைதொடர்ந்து, புதுச்சேரி முன்னாள் எம்எல்ஏ ஓம்சக்தி சேகர் தமிழக முதல்வர் ஓ.பன்னீர் செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்து வந்தார்.

இதன் காரணமாக அவரை அதிமுக கட்சியில் இருந்து நீக்கியதாக தற்போதைய தற்காலிக அதிமுக பொதுச்செய லாளர் சசிகலா அறிவித்தார்.

இது புதுச்சேரி அதிமுகவினரிடையே கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

அதைத்தொடர்ந்து ஒம்சக்தி சேகர் தொகுதியான நெல்லித்தோப்பு தொகுதி அதிமுக நிர்வாகிகள் அனைவரும் தங்களது பதவிகளை ராஜினாமா செய்வதாக அறிவித்து உள்ளனர். நெல்லித்தோப்பு அதிமுக கூண்டோடு கலைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

மேலும், ஓம்சக்தி சேகருக்கு ஆதரவு தெரிவித்தும், சசிகலாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுச்சேரி லெனின் சாலையில் அதிமுகவினர் சாலை மறியல் செய்து வருகின்றனர்.

இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு உள்ளது. பரபரப்பான சூழ்நிலை நிலவி வருகிறது.