புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் பருவத் தேர்வுகள் ரத்து: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

புதுச்சேரி: புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கான பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. அதனால், பள்ளி, கல்லூரிகளை திறக்கப்பட முடியாத சூழல் இருக்கிறது. அதனையடுத்து, 10ம் வகுப்பு பொதுத்தேர்வுகளை பல்வேறு மாநிலங்களில் ரத்து செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், பாண்டிச்சேரி பல்கலைக்கழக முதலாமாண்டு மற்றும் இரண்டாமாண்டு மாணவர்களுக்கு பருவத் தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

மேலும், இன்டர்னல் மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு தேர்ச்சி வழங்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரியர் வைத்திருக்கும் மாணவர்களுக்கு மட்டும் தேர்வு நடைபெறும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.