’மிக மிக அவசரம்’ படத்தை பாராட்டிய புதுச்சேரி முதலமைச்சர்…!

தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தனது வி ஹவுஸ் பிக்சர்ஸ் நிறுவனம் மூலம் தயாரித்து இயக்கியிருக்கும் படம் ‘மிக மிக அவசரம்’.

பெண் காவலர்களை மையப்படுத்தி உருவாகியுள்ள இப்படத்தில் ஸ்ரீபிரியங்கா கதாநாயகியாக நடித்திருக்கிறார்.

தமிழக செய்தி மற்றும் விளம்பரத்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ உள்ளிட்ட தமிழக அமைச்சர்கள் பலர் படத்தை பார்த்து வெகுவாக பாராட்டினார்கள்.

இந்த நிலையில், ‘மிக மிக அவசரம்’ படத்தை சமீபத்தில் பார்த்த புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி, படத்தை பாராட்டியதோடு, நாயகி ஸ்ரீபிரியங்கா மற்றும் இயக்குநரும் தயாரிப்பாளருமான சுரேஷ் காமாட்சி ஆகியோரை நேரில் அழைத்து பொன்னாடை போர்த்தி பாராட்டியுள்ளார்.