புதுச்சேரி : கன மழை காரணமாக நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

புதுச்சேரி

ன மழை தொடர்ந்து பெய்து வருவதால் நாளை புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

வங்கக் கடலில் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக வட தமிழக மாநிலங்களில் கனமழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. அதன்படி தற்போது சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியிலும் கன மழை பெய்து வருகிறது.
இந்த கன மழை நாளையும் நீடிக்கும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.
இதை ஒட்டி புதுச்சேரி மாநில பள்ளிக் கல்வித்துறை நாளை மாணவர்களின் பாதுகாப்பு கருதி பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவித்துள்ளது.