புதுவை: மதுஆலையில் ஆளுநர் ஆய்வு

புதுவை அய்யங்குட்டிபாளையத்தில் செயல்படும் மது ஆலையில்  துணை நிலை ஆளுநர் கிரண்பேடி ஆய்வு செய்து வருகிறார்.

புதுவை அய்யங்குட்டிபாளையத்தில் இயங்கி வரும் மது ஆலையில், அதிக அளவு நிலத்தடி நீர் உறிஞ்சப்படுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்துவந்தன.

இந்த நிலையில் இன்று கிரண்பேடி , அந்த ஆலையில் அதிரடி ஆய்வு மேற்கொண்டிருக்கிறார். அவருடன் ஏராளமான அதிகாரிகள் சென்று ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.

“நீர்ஆதாரம் புதுச்சேரிக்கு முக்கியமானது. ஆகவே குடிநீர் தவறாக பயன்படுத்தப்படுவதை ஏற்கமுடியாது. குறிப்பிட்ட இந்த ஆலை குடிநீரை முரைகேடாக உறிஞ்சுவது உறுதிப்படுத்தப்பட்டால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்” என்று கிரண்பேடி தெரிவித்தார்.