புதுச்சேரி:  பாண்டிச்சேரி பல்கலைக்கழகத்தில் வெகுஜன தகவல் தொடர்பு முதுகலைப் பட்டப்படிப்பில் தங்கம் வென்ற ரபீஹா அப்துர்ரெஹிம் 23ம் தேதி நடைபெற்ற பல்கலைகழகத்தின் 27வது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்படவில்லை.  ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கலந்து கொண்ட அந்த விழாவில் மாணவி ரபீஹா தனது ஸ்கார்ஃப் ஐ வித்தியாசமான முறையில் அணிந்திருந்ததால் அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறப்படுகிறது.

ஒரு சில மாணவர்களுக்கு தங்கப் பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கிய ஜனாதிபதி கோவிந்த் பல்கலைக்கழகத்தை விட்டு வெளியேறிய பின்னரே ரபீஹா விழாவில் பங்கேற்க அனுமதிக்கப்பட்டார்.

“அந்த இடத்திலிருந்து நான் ஏன் வெளியே அனுப்பப்பட்டேன் என்று எனக்குத் தெரியவில்லை. ஆனால் உள்ளே இருந்த மாணவர்கள் போலீசாரிடம் கேட்டபோது, ​​‘ஒருவேளைஅவள் வேறு வழியில் அவள் தனது ஸ்கார்ஃப் ஐ வேறு விதமாக அணிந்திருந்ததால் இருக்கலாம்‘  என்று சொன்னதை நான் அறிந்தேன்.

நான் வெளியே அனுப்பப்பட்டதன் காரணம் அதுவாகவும் இருக்கலாம் என நானும் நினைத்திருந்தேன், ஆனால் யாரும் இதுவரை, “இதனால்தான் உங்களை வெளியேற்றினோம்“, என்று என் முகத்திற்கு நேராக அப்பட்டமாக சொல்லவில்லை, அவர்கள் எனக்கு எந்த காரணமும் தெரிவிக்கவில்லை“, என்று ரபீஹா கூறினார்.

தனது பேட்ச்சில் முதல் இடத்தைப் பெற்ற மாணவி ரபீஹா, தனது தங்கப்பதக்கத்தை பெற்றுக் கொள்ள மறுப்பதன் மூலம் குடியுரசுத் தலைவர் இருந்த போது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) மற்றும் நாட்டில் உள்ள குடிமக்களின் தேசிய பதிவு (NCR) க்கு எதிராகவும் தனது எதிர்ப்பைப் பதிவு செய்தார்.

ரபீஹா ஒரு ஹிஜாப் அணிந்து ஜவஹர்லால் நேரு ஆடிட்டோரியம் என்ற மாநாட்டு இடத்தை அடைந்தார். ஜனாதிபதி வருவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, ஒரு காவல்துறை அதிகாரி அவரிடம் ஒரு வார்த்தை கூற வெளியே வரும்படி கேட்டார்.  அதன் பிறகு, ஜனாதிபதி வெளியேறிய பின்னரே அவர் விழாவில் கலந்து கொள்ள அனுமதிக்கப்பட்டார்.

“ஜனாதிபதி விழாவில் கலந்து கொண்டார். நான் ஒரு சந்தேகத்திற்குரிய நபராக இருந்ததால் எனது சொந்த பட்டமளிப்பு விழாவில் அனுமதி மறுக்கப்பட்டேன்.  பதக்கத்தை நிராகரிப்பதன் மூலம் நான் இச்செயலை எதிர்க்கிறேன்.  “எனது செய்தி மிகவும் தெளிவானது மற்றும் அமைதியானது என்று நான் நம்புகிறேன்“, என்று அவர் கூறினார்.