புதுச்சேரியில் லாக்டவுன் டிசம்பர் 31ம் தேதி வரை நீட்டித்து உத்தரவு..!

புதுச்சேரி: புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய பொதுமுடக்கம் டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரியில் 2,904 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டதில், 46 பேருக்கு இன்று கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக உயிரிழப்பு ஏதும் இல்லை. இருப்பினும், பலியானவர்களின் எண்ணிக்கை 609  ஆக இருக்கிறது. இறப்பு விகிதம் 1.65 சதவீதமாக உள்ளது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் மொத்த எண்ணிக்கை 36 ஆயிரத்து 902 ஆக  அதிகரித்து உள்ளது. மருத்துவமனைகளில் 194 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந் நிலையில், புதுச்சேரியில் கொரோனா தளர்வுகளுடன் கூடிய லாக்டவுன்  டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. தற்போது பிறப்பிக்கப்பட்டு உள்ள தளர்வுகளின் படி மத்திய அரசின் வழிகாட்டுதல் படி டிசம்பர் 31 ம் தேதி வரை நீட்டிக்கப்படுகிறது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.