அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ்: தமிழக அரசு அறிவிப்பு

சென்னை:

மிழகஅரசு, அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் அறிவித்து உள்ளது. அதன்படி  தமிழக அரசின் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை ஊதியம் வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை வரும் 15ந்தேதி  கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி, தமிழக அரசில் பணிபுரியும் சி மற்றும் டி பிரிவு ஊழியர்களுக்கு ஒரு மாதத்துக்கு இணையான மிகை ஊதியம் போனசாக வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

அதன்படி அரசு ஊழியர்களுக்கு  ஆயிரம் ரூபாய் முதல் முதல் 3000 ரூபாய் வரை கிடைக்கும்.

சிறப்பு காலமுறை ஊதியம் பெற்று வந்த சத்துணவு திட்டப் பணியாளர்கள், பஞ்சாயத்து செயலர்கள் உள்ளிட்டோருக்கு தற்காலிக மிகை ஊதியமாக ஆயிரம் ரூபாய் அனுமதிக்கப்படுவதாக கூறப்பட்டுள்ளது.

இதே போன்று சி மற்றும் டி பிரிவு பணியாளர்களாக இருந்து ஓய்வுபெற்ற ஓய்வுதியதாரர்கள் மற்றும் பணியாளர்கள் பணியிடை மரணமடைந்து இருந்தாலும் பொங்கல் பரிசுத் தொகையாக 500 ரூபாய் வழங்கி அரசு ஆணையிட்டுள்ளது.

You may have missed