பொங்கல் பண்டிகை: இலவச வேட்டிசேலை திட்டத்தை தொடங்கி வைத்தார் எடப்பாடி

சென்னை:

பொங்கல் பண்டிகையை யொட்டி, தமிழகம் முழுவதும் ஏழைய எளிய மக்களுக்கு வழங்கப் படும் இலவச வேட்டி சேலை திட்டத்தை தலைமை செயலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார்.

இதன்படி தமிழகத்தில் சுமார் ஒன்றரை கோடி குடும்பத்தை சேர்ந்தவர்களுக்கு இலவச வேட்டி வேலை வழங்கப்பட உள்ளது.

ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகையை சிறப்பிக்கும் வகையில் ஏழை எளிய மக்களுக்கு இலவச வேட்டி சேலைகளை தமிழக அரசு வழக்கி வருகிறது. அதன்படி 2019 ம் ஆண்டு பொங்கல் பண்டிகையை யொட்டி இலவச வேட்டி சேலை வழங்கப்படும் என ஏற்கனவே தமிழக அரசு அறிவித்திருந்த நிலையில், இன்று 5 குடும்பங்களுக்கு இலவச வேட்டி சேலை வழங்கி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி திட்டத்தை தொடங்கி வைத்தார்.  இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஓ.எஸ்.மணியன், ஆர்.பி.உதயகுமார் மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

2019ம் ஆண்டு பொங்கலுக்கு  484 கோடியே 25 லட்சம் ரூபாய் செலவில் 1 கோடியே 56 லட்சத்து 54 ஆயிரம் சேலைகளும், 1 கோடியே 56 லட்சத்து 44 ஆயிரம் வேட்டிகளும் வழங்கப்பட உள்ளதாக தமிழக அரசு தெரிவித்து உள்ளது. இந்த

இதை பயனாளிகளுக்கு வழங்கிடும் அடையாளமாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று 5 குடும்பங்களுக்கு விலையில்லா வேட்டி சேலைகளை வழங்கி திட்டத்தினை தலைமை செயலகத்தில் துவக்கி வைத்தார்.

தைத்தொடர்ந்து,  பொதுப்பணித் துறையின் கீழ்செயல்படும் நீர்வள ஆதாரத் துறை மற்றும் கட்டிட அமைப்பில் காலியாக உள்ள 91 உதவிப் பொறியாளர் (சிவில்) மற்றும் 40 உதவிப் பொறியாளர் (பணி) இடங்களுக்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக தெரிவு செய்யப்பட்ட 131 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 7 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

தையடுத்து, அரியலூரில் உள்ள அரசு கலைக் கல்லூரியில் 4கோடியே 23 லட்சத்து 82 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 15 வகுப்பறைகள், 1 ஆங்கில மொழி ஆய்வகம், 4 ஆய்வகத் தொகுப்பு மற்றும் கழிவறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.

மேலும் பாரதியார் பல்கலைக்கழகத்தில் 5 கோடியே 90 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள கூடுதல் கட்டிடங்கள் கரூர் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 5 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 9 பொன்விழா நினைவு வகுப்பறைக் கட்டிடங்கள்,

காரிமங்கலத்தில் உள்ள அரசு மகளிர் கலை மற்றும் அறிவியல்கல்லூரியில் 1 கோடியே 65 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 10 வகுப்பறைக் கட்டிடங்கள்,

செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 37 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 5 வகுப்பறைக் கட்டிடங்கள் மற்றும் ஆய்வகக் கட்டிடம்,

சைதாப்பேட்டையில் உள்ள அரசு கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தில் 70 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டிடங்கள்,

சென்னை, பாரதி மகளிர் கல்லூரியில் 87 லட்சத்து 85 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 2 வகுப்பறைகள் மற்றும் பல்நோக்குக்கூடம்,

சென்னை, காயிதே மில்லத் அரசு மகளிர் கலைக் கல்லூரியில் 1 கோடியே 40 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 4 வகுப்பறைக் கட்டடங்கள், பல் நோக்குக்கூடம், மேம்படுத்தப்பட்ட ஆய்வகம் மற்றும் நூலகக் கட்டிடங்கள்,

செங்கல்பட்டில் உள்ள ராஜேஸ்வரி வேதாச்சலம் அரசு கலைக் கல்லூரியில் 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில்கட்டப்பட்டுள்ள 8 வகுப்பறைகள் மற்றும் கழிவறைகட்டிடங்கள்

உள்பட என மொத்தம் 25 கோடியே 24 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள உயர் கல்வித்துறை கட்டிடங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் அமைச்சர் கே.பி.அன்பழகன் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இவ்வாறு தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கார்ட்டூன் கேலரி

இந்த கட்டுரையைப் பற்றி உங்கள் கருத்துகளை பதிவு செய்யவும்


Tags: Edappadi Palaniswami, Free Dhoti and Saree scheme, Pongal Festiva, இலவச வேட்டிசேலை, எடப்பாடி பழனிச்சாமி, பொங்கல் பண்டிகை
-=-