பொங்கல் பண்டிகை: பொங்கல் வைக்க உகந்த நேரம் எது?

பொங்கல் பண்டிகை:

பொங்கல்  பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக தமிழர்களால் கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம் தேதி) கொண்டாடப்படும். இந்த தேதி என்றுமே மாறுவதில்லை என்பது ஆச்சரியமே.

தை பொறந்தால் வழி பிறக்கும் என்பார்கள். தமிழ் மாதங்களில் தனிச் சிறப்பு வாய்ந்த மாதங்களில் முக்கியமானது தை மாதம்

உழவுக்கும், தொழிலுக்கும் வந்தனை செய்வோம்என்பதற்கேற்ப, உழவர் திருநாள் கொண்டாடப்படு கிறது. பொங்கலுக்கு தமிழர் திருநாள் என்பதைப் போல் உழவர் திருநாள் என்ற சிறப்புப் பெயரும் உண்டு.

உழவர்கள் இந்தப் பண்டிகையை சிற்பாக கொண்டாடுவார்கள். வருடம் முழுவதும் வயலில் வியர்வை சிந்த உழைத்த உழவர்கள் பகலவனுக்கு நன்றிதெரிவிக்கும் விதமாக இந்த பண்டிகையை கொண்டாடுகிறார்கள்.

‘தை பிறந்தால் வழி பிறக்கும்’ இது ஆன்றோர் வாக்கு. தை திருநாளில் இது வரை இருந்து வந்த துன்பங்கள் நீங்கி நல்வழி பிறக்கும் என்றநம்பிக்கையோடு இந்த பண்டிகை சிறப்பாக கொண்டாடப்படுகிறது.

பொங்கல் தினத்தன்று அடுப்பில் பொங்கல் பானை வைக்கப்பட்டு (முன் காலத்தில் மண்பானை உபயோகப்படுத்தப்பட்டு வந்தது) அதற்கு பொட்டு வைத்து, பானையைச் சுற்றிமஞ்சள் கட்டி அதில் பால் ஊற்றி சூடு படுத்தப்படும். பால் பொங்கி வந்ததும் குடும்பத்தினர் அனைவரும் ” பொங்கலோ பொங்கல்” என கூறிபொங்கலை வரவேற்பர்.

தை மாதம் பிறக்கும் போது பொங்கல் பானை வைக்கப்படுவது தொன்று தொட்டு இருந்து வரும் வழக்கமாகும்.

சில சமயம் மாதம் அதிகாலைபிறக்கும். சில சமயம் மதியமோ அல்லது மாலையோ மாதம் பிறக்கும். சில சமயம் இரவு நேரத்தில் கூட மாதம் பிறக்கும். மாதம் பிறக்கும்நேரப்படி பொங்கல் பானை வைக்கப்படும்.

பொங்கலின் சிறப்பம்சம் கரும்பும், மஞ்சள் கொத்தும். தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் கரும்பும், மஞ்சள் கொத்தும் விற்பனை செய்யப்படுவதைகாணலாம். இந்த விற்பனை ஜனவரி மாதம் முதல் தேதி முதலே தொடங்கிவிடும்.

பொங்கலன்று பால் பொங்கல், சர்க்கரைப் பொங்கல், வெண் பொங்கல் ஆகியவை தயாரிக்கப்பட்டு சூரியனுக்கு நிவேதனம் செய்யப்படும். கரும்பும்நிவேதனப் பொருளில் முக்கிய இடம் பெறும்.

சூரியனுக்கு நிவேதனம் என்பதால் வீட்டின் மாடியிலோ அல்லது திறந்த வெளி பகுதியிலோ தேரில் சூரியன் வருவது போல் கோலமிடட்டு அதற்கு அருகில்நிவேதனப் பொருட்கள் வைக்கப்பட்டு சூரியனுக்கு பூஜையும்,நிவேதனமும் நடைபெறும்.

பொங்கல் தினத்தை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு பூஜை நடைபெறும். மக்கள் புத்தாடை அணிந்து பொங்கலை கொண்டாடுவார்கள்.

பொங்கல் பண்டிகை உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் மிக சிறப்பாக கொண்டாடப்படுகிறது. தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டில் வெகு விமரிசையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகை, மலேசியா, கனடா, சிங்கப்பூர், இலங்கை, மொரீஷியஸ் உள்ளிட்ட அனைத்து உலக நாடுகளிலும் கூட விமரிசையாக கொண்டாடப்பட்டு வருவது தமிழுக்கும், தமிழர்க்கும் பெருமை.

பொங்கல் வைக்க உகந்த நேரம்:

14-1-18 ஞாயிற்றுக்கிழமை உத்ராயன புண்ய. காலமும் மகர சங்க்ராந்திங்கற தைப்பொங்கல். பொதுவாக சூரியன் உதயமாகும் நேரத்தில்தான் பொங்கல் வைப்பது தமிழர்களின் கலாச்சாரம். விவசாயிகளும் பொங்கலிட்டு சூரியனுக்கு படைத்து நன்றி செலுத்துவதும் வழக்கம்.

ஆனால் இந்த முறை தைமாசம் பிறப்பது பிற்பகலில் என்று பஞ்சாங்கம் கூறுகிறது.   திருக்கணித பஞ்சாங்கப்படி 14-1-18 அன்று மத்தியாம்  1-44 மணி என்றும், வாக்கிய  பஞ்சாங்கப்படி சாயந்திரம் 4-30 மணிக்கும் தை மாதம் பிறப்பதாக கூறப்படுகிறது.

பொங்கல் என்றாலே அது சூரிய பகவானுக்கு நன்றி செலுத்தும் பூஜை. ஆகவே சூரியனுக்கு செய்யும் பூஜை அஸ்மனத்தில் செய்வது தவறு.

ஆகவே பொங்கல் பானை  வைக்க உகந்த  நேரம் பகல் 11 முதல் 12 மணி வரை குருஹோரையில் வைப்பது நலம் என்று ஜோதிடர்கள் கூறுகிறார்கள்.

இல்லையென்றால் எப்போதும்போல, காலை 6-00 மணி முதல் 7-00க்குள், அதையடுத்து காலை 7.30 மணி முதல் 8.30 மணிக்குள்ளும் பொங்கப்பானை அடுப்பில் வைக்க நல்ல நேரமாக கணிக்கப்பட்டுள்ளது.

சுப வேளைகளில்  பொங்கப்பானை வைத்து பால் பொங்கி பொங்கல் செய்து, அதை சூரியனுக்கு படைத்து பண்டிகையை சிறப்பியுங்கள்…

அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்…..

Leave a Reply

Your email address will not be published.