சென்னை:
முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில், இன்று பல்கலைக்கழக துணைவேந்தர்கள் மாநாடு நடைபெற உள்ளது.

இக்கூட்டத்தில் அனைத்து பல்கலைக்கழகங்களின் துணைவேந்தர்கள், உயர் கல்வித்துறை அதிகாரிகள், அதேபோன்று மாநில கல்வி கொள்கையை வகுக்க கூடிய குழுவின் தலைவர், உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்து கொள்கின்றனர்.
உயர்கல்வித் துறை செயல்பாடுகள், புதிய கல்வி கொள்கை, உயர்கல்வித் துறையின் தரத்தை உயர்த்துவது, பாடத்திட்டங்களை மேம்படுத்துவது , மாநில கல்வி கொள்கை உட்பட பல்வேறு அம்சங்கள் குறித்து முதல்வர் ஆலோசனை நடத்துகிறார்.
Patrikai.com official YouTube Channel