சென்னை:

மிழகஅரசு அறிவித்துள்ள ரூ.ஆயிரம் உடன் இலவச பொங்கல் தொகுப்பு இன்று முதல் தமிழகத்தில் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில்  அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் விநியோகம் செய்வது குறித்து தமிழக அரசு பல்வேற அறிவுடிரகளை வழங்கி உள்ளது.

அதன்படி,  31.12.2018 அன்று உள்ளபடி அனைத்து குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பாக 1கிலோ பச்சரிசி,1கிலோ சர்க்கரை,20 கிராம் முந்திரி, 20 கிராம் திராட்சை, 5 கிராம் ஏலக்காய், ஆகியவற்றை காகித உறைகளில் போட்டும், அத்துடன் ரூ 1000/- (500+500 =1000 என இரண்டு நோட்டு கையில் கவர் போடாமல் 2 அடி கரும்புடன் தரவும்) ஆகியவற்றை அதற்கான துணிப்பை வரப்பெற்றிருப்பின் அதில் போட்டு வழங்க வேண்டும்.

பொங்கல் பரிசு தொகுப்பு POS மூலம் பில் போட்டு வழங்கவேண்டும்.பணம் வழங்குவதற்கு ஆதாரமாக பதிவேடு ஒன்று தொடங்கி அதில் குடும்ப அட்டைதாரின் ஒப்பம் பெறவும் வேண்டும்.

7.1.2019 முதல் 12.1.2019 ,வரை அனைத்து கடைகளிலும் அதற்குரிய வேலை நாட்களில் வழங்க வேண்டும். விடுபட்டவர்களுக்கு 13.1.2019 , 14.1.2019 தேதிகளில் வழங்க வேண்டும்.

அனைத்து முழு/ப.நேர கடைகளிலும் உரிய வேலை நாட்களில் வழங்கப்படும், எனபதும் பயனாளிகள் பட்டியல் அறிவிப்பு இன்று ஒட்டப்பட வேண்டும். தொங்கவிட கூடாது.

கூட்ட நெரிசலை தவிர்க்க 400 குடும்ப அட்டைகளுக்கும் மேல் உள்ள கடைகளில் ஒரு நாளைக்கு இத்தனை என பிரித்து சுழற்சி (Staggering) முறையில் வழங்கிட வேண்டும்.

பரிசு தொகை ரொக்கத்தை சங்க செயலர்கள் வங்கியில் பெற்று தங்களது பாதுகாப்பில் வைத்துக் கொண்டு விற்பனையாளருக்கு அவ்வப்போது தேவையான வழங்க வேண்டும். மாலையில் மீதி கையிருப்பை திரும்ப பெற்றுக்கெள்ள வேண்டாம். இதற்கு செயலர்களே முழு பொறுப்பாவார்கள்.

இந்த பணிக்கு சங்கத்தில் உள்ள அனைத்து பணியாளர்களையும் ஈடுபடுத்த வேண்டும்.பணியாளர்கள் பற்றாகுறை உள்ள சங்கங்களில் இப்பணிக்காக மட்டும் தினக்கூலி அடிப்படையில் ஆட்களை வைத்துக்கொள்ளலாம்.

குடும்ப அட்டை,ஆதார் அட்டை(QR CODE மூலம்),பதிவு செய்யப்பட்ட கைப்பேசி எண்(OTP)ஆகியவற்றை பயன்படுத்தி வழங்க வேண்டும்.

கிப்ட் பை (gift bag) வர வில்லை என்றாலும் பொதுமக்கள் கொண்டு வரும் கை பைகளில் வழங்க வேண்டும்.

குடும்ப தலைவர்/ உறுப்பினர்கள் யார் வந்தாலும் வழங்க வேண்டும்.

ஒரு அட்டைக்கு மேல் வழங்க கூடாது என்ற நிபந்தனை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும்.

பதற்றமான கடைகளுக்கு காவல் துறை பாதுகாப்பு பெற்றுக்கொள்ள வேண்டும்.

மாலையில் அன்றைய விற்பனை குறித்து வ.வ.அ/கூ.சா.ப.க்கு புள்ளி விவரம் அளிக்க வேண்டும்.

விநியோகித்தை கண்காணிக்க கூட்டுறவு/வருவாய் ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் கண்காணிப்பார்கள்.

மேற்கண்ட அரசின் அறிவுரைகளை அனைவரும் பின்பற்றி இந்த பணியை எவ்வித புகார்கள் இல்லாமல் சிறப்பாக செய்து முடிக்க அனைவரும் ஒத்துழைத்திட வேண்டும்.

இவ்வாறு தமிழகஅரசு அறிவித்து உள்ளது.