சென்னை: பொங்கல் பண்டிகையையொட்டி, அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு ரூ.2,500 பொங்கல் பரிசு வழங்கப்படும் என தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதிரடியாக அறிவித்து உள்ளார். இதற்காக டு வீடாக சென்று டோக்கன் வழங்கப்பட்டு  ஜனவரி 4ஆம் தேதி முதல்  பொங்க்ல் பரிசு வழங்கப்படும் என்றும்  தெரிவிக்கப்பட்டுள்ளது.

சேலம் மாவட்டம் எடப்பாடி தொகுதி இருப்பாளி பகுதியில் அம்மா சிறு மருத்துவமனையை தொடங்கி வைத்த முதல்வர்  எடப்பாடி பழனிசாமி, இன்று தனது முதல்கட்ட தேர்தல் பிசாரத்தையும் தொடங்கி உள்ளார்.

அங்கு நடைபெற்ற நிகழ்ச்சியில் பேசும்போது,  தைப் பொங்கலை முன்னிட்டு அரிசி பெறும் குடும்ப அட்டை வைத்திருக்கும் 2.6 கோடி அட்டைதாரர்களுக்கு தலா 2,500 ரூபாய் வழங்கப்படும். 2021 -ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் தேதி முதல் அனைவருக்கும் பொங்கல் பரிசு வழங்கப்படும் என்றார்.

ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைகளுக்கும் பொங்கல் பரிசாக ஒரு கிலோ அரிசி, ஒரு கிலோ சர்க்கரை, திராட்சை, முந்திரியுடன், ஒரு துண்டு கரும்புக்குப் பதிலாக முழு கரும்பு வழங்கப்படும் என்றும் முதல்வர் குறிப்பிட்டுள்ளார்.

பொங்கல் பரிசாக பச்சரிசி குடும்ப அட்டைகளுக்கு ரூ.1000 வழங்கப்பட்டு வந்த நிலையில், வரும் ஆண்டில், ரூ.2,500 வழங்கப்படும் என்று முதல்வர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

வீடு வீடாக வந்து டோக்கன் கொடுக்கப்பட்டு, ஜனவரி 4-ம் தேதி முதல் பொங்கல் பரிசு வழங்கும் திட்டம் தொடங்கப்பட உள்ளதாக முதல்வர் தெரிவித்துள்ளார்.

சட்டமன்ற தேர்தல் எதிரொலி: தமிழகத்தில் பொங்கல் பரிசாக ரூ.2ஆயிரம் உடன் பொங்கல் தொகுப்பு?