பொங்கலுக்கு வெளியாகும் விஸ்வாசம்: விநியோகஸ்தர் பட்டியல் வெளியீடு

சென்னை:

டிகர் அஜித் நடித்துள்ள விஸ்வாசம் படம் பொங்கலுக்கு ரிலிசாவதாக அறிவித்துள்ள நிலையில், படத்தின் ரிலீஸ் உரிமையை பெற்ற விநியோகஸ்தர்களின் பட்டியல் வெளியாகியுள்ளது.

சத்யஜோதி ஃபிலிம்ஸ் நிறுவனம் தயாரிப்பில், இயக்குநர் சிவா- அஜித் கூட்டணியில் உருவாகி யுள்ள படம் ‘விஸ்வாசம்’. இந்தப் படத்தில் அஜித்துக்கு ஜோடியாக நயன்தாரா. தம்பி ராமையா, ரோபோ சங்கர், யோகிபாபு, தெலுங்கு நடிகர் ரவி அவானா உள்பட எராளமானோர்  நடித்துள்ளனர். படத்துக்க டி.இமான்  இசையமைத்துள்ளார்.

விஸ்வாசம் படத்தின் பாடல்கள் சமீபத்தில்  வெளியாகி அவரது ரசிகர்களிடையே பலத்த வரவேற்பு பெற்ற நிலையில், படம் பொங்கலுக்கு ரிலிசாகிறது.

ரஜினி நடித்துள்ள பேட்ட படத்துக்கு ஈடு கொடுக்கும் வகையில் அஜித்தின் விஸ்வாசம் படமும் வெளியாவது பலத்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில் தமிழகம் முழுவதும் வெளியாகும் விஸ்வாசம் படத்திம் விநியோக உரிமையை யார் யார் பெற்றுள்ளார்கள் என்ற விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது.

விஸ்வாசம் படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி கைப்பற்றி உள்ள நிலையில், சென்னை விநியோக உரிமையை  எஸ்பிஐ சினிமாஸ் நிறுவனமும், செங்கல்பட்டில் ட்ரிடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனமும், கோவையில் வால் மார்ட் ஃபிலிம்ஸ் நிறுவனமும், சேலத்தில் ஃபைவ் ஸ்டார் செந்திலும், நெல்லை மற்றும் குமரியில் ஸ்ரீராஜ் ஃபிலிம்ஸ் நிறுவனமும், மதுரையில் சுஷ்மா சினி ஆர்ட்ஸ் நிறுவனமும் வட ஆற்காடு – தென்னாற்காடு பகுதியில் எஸ் பிக்சர்ஸ் நிறுவனமும் வெளியிட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.