சூர்யாவின் 2டி நிறுவனம் தயாரிப்பில் , புதுமுக இயக்குநர் ஜே.ஜே.பிரட்ரிக் இயக்கத்தில் , ஜோதிகா நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பொன்மகள் வந்தாள்’.
இதில் பாக்யராஜ், பார்த்திபன், பிரதாப் போத்தன், தியாகராஜன், பாண்டியராஜன் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியீட்டுக்குத் தயாராக இருந்த இப்படம் கொரோனா ஊரடங்கினால் வெளியீடு தள்ளிவைக்கப்பட்டது.
இதனிடையே, இந்தப் படத்தை நேரடியாக இணையத்தில் வெளியிடப் படக்குழு முடிவு செய்துள்ளது. இந்தப் படத்தை அமேசான் ப்ரைம் நிறுவனம் பெரும் விலை கொடுத்து வாங்கியிருந்ததால், திரையரங்கில் வெளியாகாது என்பது தெளிவாகியுள்ளது.


இந்நிலையில் இப்படம் வரும் மே 29- ஆம் தேதி வெளியாகிவுள்ளதாக அமேசான் பிரைம் நிறுவனம் தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.