கொரோனா அச்சம்: ‘பொன்மகள் வந்தாள்’ இசை வெளியீட்டு விழா ரத்து

சூர்யா 2டி எண்டர்டெயின்மென்ட் சார்பாக தயாரிக்கும் ‘பொன்மகள் வந்தாள்’ படத்தில் ஜோதிகா நடிக்கிறார். இந்த படத்தை ஜேஜே ஃபெட்ரிக் இயக்குகிறார்.

இந்த படத்தில் கே.பாக்யராஜ், பார்த்திபன், பாண்டியராஜன், பிரதாப் போத்தன் உள்ளிட்ட இயக்குநர்கள் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இந்த படத்துக்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்ய, கோவிந்த வசந்தா இசையமைக்கிறார்.

மேலும், மார்ச் 27-ம் தேதி இந்தப் படம் வெளியாகும் எனவும் அறிவித்திருந்தார்கள்.

இந்தப் படத்தை விளம்பரப்படுத்தும் பணிகளைத் தொடங்க, நாளை (மார்ச் 17) சென்னையில் இசை வெளியீட்டு விழா நடத்த படக்குழு முடிவு செய்திருந்தது. ஆனால், கரோனா வைரஸ் அச்சத்தால் தற்போது இசை வெளியீட்டு விழாவைப் படக்குழு ரத்து செய்துவிட்டது. சமூக வலைதளத்தில் பாடல்கள் வெளியிடப்படும் எனவும் படக்குழு அறிவித்துள்ளது.