முன்னாள் அமைச்சர் வராததால் ஒத்தி வைக்கப்பட்ட ஊழல் வழக்கு

விழுப்புரம்

முன்னாள் அமைச்சர் பொன்முடி மீதான வழக்கு விசாரணை ஜனவரி 8 ஆம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது

திமுகவை சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடி மீது செம்மண் குவாரி வழக்கு மற்றும் சொத்துக் குவிப்பு ஊழல் வழக்கு ஆகியவை தொடுக்கப்பட்டுள்ளது.  இந்த வழக்குகளின் விசாரணை விழுப்புரம் ஊழல் தடுப்புப் பிரிவு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறுகிறது.

இன்று நடைபெற்ற இந்த வழக்கின் விசாரணைக்கு முன்னாள் திமுக அமைச்சர் பொன்முடி வரவில்லை.   அதனால் வழக்கின் விசாரணை வரும் ஜனவரி மாதம் 8ஆம் தேதி அன்று ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.